வந்தியத் தேவனை காண வந்த ஜப்பான் ரசிகர்கள்

வந்தியத் தேவனை காண வந்த ஜப்பான் ரசிகர்கள்

1 mins read
7045ec16-e778-4bb8-99fc-92e17a16cec9
-

ஜப்பானில் இருந்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க சில ரசிகர்கள் சென்னை வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி, ஜப்பானிய ரசிகர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி. அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.

இந்நிலையில் கார்த்தியின் தீவிர ரசிகர்கள் சிலர் ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளனர். சூட்டோடு சூடாக சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நான்கு முறை 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்தி, அந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

பின்­னர் அவர்­க­ளு­டன் ஜப்­பா­னிய சூழல் குறித்து கலந்­து­ரை­யாடி சில விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றிந்­துள்­ளார்.

"எனக்­காக ஆசை­யு­டன் வாங்கி வந்த பரி­சுப் பொருள்­களை அவர்­கள் அளித்­த­போது நெகிழ்ந்து போனேன்," என்­கி­றார் கார்த்தி.

ஜப்­பானிய ரசி­கர்­கள் கேட்­டுக்­கொண்­டதை அடுத்து அவர்­க­ளு­டன் சேர்ந்து சில புகைப்­ப­டங்­களை எடுத்­துக்­கொண்ட கார்த்தி, அவற்றை சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­துள்­ளார். அவற்­றைக் கண்ட உள்­ளூர் ரசி­கர்­கள் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­னர். மேலும் ஜப்­பானிய ரசி­கர்­க­ளுக்கு வாழ்த்­தும் நன்­றி­யும் தெரி­வித்­துள்­ள­னர்.

ரஜி­னிக்கு ஜப்­பா­னில் தனி ரசி­கர் கூட்­டம் உள்­ளது. தற்­போது கார்த்­திக்குக்­கும் தீவிர ரசி­கர்­கள் இருப்­பது திரை­யு­ல­கத்­தி­னரை வியப்­பில் ஆழ்த்தி உள்­ளது.