எடையைக் குறைக்க பிடித்தமான உணவைத் தவிர்த்த கதாநாயகி

எடையைக் குறைக்க பிடித்தமான உணவைத் தவிர்த்த கதாநாயகி

2 mins read
cebd91e9-dc19-4226-bad2-7b4690fa9142
-

பா. இரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வா­கி­வ­ரும் 'தங்­க­லான்' திரைப்­ப­டத்­தில் விக்­ர­மிற்கு நாய­கி­யாக நடிக்­கி­றார் மாள­விகா மோக­னன்.

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில், ரஜினி நடித்த 'பேட்ட' படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அடி­யெ­டுத்து வைத்­தார் மாள­விகா. பின்­னர் 'மாஸ்­டர்' திரைப்­ப­டத்­தில் விஜய்­யு­டன் இணைந்து நடித்த இவர், அண்­மை­யில் தனுஷ் நடிப்­பில் வெளி­யான 'மாறன்' படத்­தி­லும் நடித்­தி­ருந்­தார்.

தற்­போது தமிழ், மலை­யா­ளம், இந்தி ஆகிய மொழி­களில் பல படங்­களில் இவர் நடித்து வரு­கி­றார்.

தங்­க­லான் படத்­தின் இறு­திக்­கட்­டப் படப்­பி­டிப்பு விரை­வில் தொடங்­க­வுள்­ள­தால் அதற்­கா­கத் தன்­னைத் தயார்ப்­படுத்­திக்­கொண்டு வரு­கி­றார் மாள­விகா.

இந்­நி­லை­யில், உடல் எடை­யைக் குறைத்து, இளைத்த தோற்­றத்­து­டன் கூடிய தமது படங்­களை டுவிட்­டர் ஊட­கம் வழி­யாக இவர் வெளி­யிட்­டுள்­ளார்.

அப்­பு­கைப்­ப­டங்­கள் இவ­ரது ரசி­கர்­களை மட்­டு­மல்­லா­மல் உட­லைக் கட்­டுக்­கோப்­பாக வைத்­துக்­கொள்­வ­தில் ஆர்­வம் கொண்ட பல­ரை­யும் உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் அமைந்­துள்­ளன.

"தங்­க­லான் படத்­தில் எனக்­குச் சிறப்­பான கதா­பாத்­தி­ரம் கிடைத்­துள்­ளது. அந்­தக் கதா­பாத்­தி­ரத்­திற்­காக ஒல்­லி­யான, இறுக்­க­மான உட­ல­மைப்பை இயக்­கு­நர் விரும்­பி­னார்.

"அத­னால், எனக்­குப் பிடித்த பிரி­யா­ணியை தியா­கம் செய்­து­விட்டு, கடி­ன­மா­கப் பயிற்சி செய்து உடல் எடை­யைக் குறைத்­துள்­ளேன். படப்­பி­டிப்பு முடி­வ­டைந்­த­தும் மீண்­டும் எனக்­குப் பிடித்த உணவு வகை­க­ளைத் தொடர்­வேன்," என்று மாள­விகா கூறி­யி­ருக்­கி­றார்.

மாள­வி­கா­வின் புகைப்­ப­டங்­க­ளைப் பார்க்­கும் போதே படத்­தில் இவ­ரின் பங்­க­ளிப்­பும் பெரி­தாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வளர்ந்துவரும் கதாநாயகிகளுக்குச் சவால்விடும் வகையில் அமைந்துள்ள இவ­ரது இந்த அர்ப்­ப­ணிப்பு தமிழ்த் திரையுலகில் இவருக்கு மேலும் பல பட வாய்ப்­பு­களைப் பெற்­றுத் தரும் என்­றும் எதிர்பார்க்கப் படுகிறது.

கோலார் தங்க சுரங்­கத்­தில் தமி­ழர்­கள் பட்ட துய­ரத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எடுக்­கப்­படும் படம் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தால் படத்­தின் மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது.

இப்­ப­டத்­தில் பசு­பதி, பார்­வதி, பிரிட்­டிஷ் நடி­கர் டான் கால்­ட­ஜி­ரோனா உள்­ளிட்ட பலர் நடிக்­கின்­ற­னர். ஜி.வி.பிர­காஷ் இசை­ய­மைக்­கி­றார்.

ஒத்திகையின்போது காயமுற்ற விக்­ரம்

இத­னி­டையே, நடி­கர் விக்­ர­மிற்கு விலா எலும்­பில் முறிவு ஏற்­பட்­ட­தால் சிறிது காலம் தங்­க­லான் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­க­மாட்­டார் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

அண்­மை­யில் 'தங்­க­லான்' படப்­பி­டிப்பு குறித்த பிரத்­தி­யே­கக் காணொளி விக்­ர­மின் பிறந்­த­நா­ளன்று வெளி­யாகி, ரசி­கர்­க­ளின் பேரா­த­ர­வைப் பெற்­றது.

அதே­போல், கடந்த வாரம் வெளி­யான பொன்னி­யின் செல்­வன்-2 திரைப்­ப­டத்­தி­லும் விக்­ர­மின் நடிப்பு பெரும் வர­வேற்பைப் பெற்­றுள்­ளது.

இந்­நி­லை­யில், ஒத்­தி­கை­யின்­போது எதிர்­பா­ராத வித­மாக நடி­கர் விக்­ர­முக்கு காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் விலா எலும்பு முறிந்­துள்­ள­தால் சிறிது காலம் அவ­ரால் தங்­க­லான் படப்­பி­டிப்­பில் பங்­கேற்க முடி­யாது என்­றும் விக்­ர­மின் மேலா­ளர் சூரி­ய­நா­ரா­ய­ணன் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், உல­கம் முழு­வ­தும் இருந்து பொன்­னி­யின் செல்­வன் மற்­றும் ஆதித்த கரி­கா­ல­னுக்­குக் கிடைத்த வியக்க வைக்­கும் வர­வேற்­புக்கு விக்­ரம் தமது நன்­றி­க­ளைப் பகிர்ந்­துள்­ள­தா­க­வும் டுவிட்­டர் பக்­கத்­தில் சூரி­ய­நா­ரா­ய­ணன் பதி­விட்­டுள்­ளார்.

இத­னால், விக்­ரம் இல்­லாத காட்­சி­கள் தற்­போது பட­மாக்­கப்­ப­ட­லாம் எனச் சொல்லப்படுகிறது.