மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 62வது படத்தின் பெயர் 'விடாமுயற்சி' எனச் சில நாள்களுக்குமுன் அறிவிக்கப்பட்டது.
படம் குறித்து ஒவ்வொரு தகவலாக வெளிவந்து கொண்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. அதேபோல, 'விடாமுயற்சி' படத்தின் பாடல்களும் இருக்க வேண்டும் என்பதற்காக 'என்னை அறிந்தால்' படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்தான் 'விடாமுயற்சி' படத்திலும் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
இதனையறிந்த அஜித் ரசிகர்கள், இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பிற்காகப் பரபரப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

