இயக்குநர் சிறுத்தை சிவா (படத்தில் இடது) இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'கங்குவா'. சூர்யா நடிப்பில் முதல் 'பான் இந்தியா' படமாக உருவாகிவரும் இப்படத்தின் மின்னிலக்க உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளுக்கு மட்டுமே இவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் 'கங்குவா' படத்தில் சூர்யாவின் நாயகியாக இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் டீசரை ஜூன் மாதம் வெளியிட இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளாராம். படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சூர்யா படத்திற்குப் பெருந்தொகை
1 mins read
-