கமல் படத்தில் சிவகார்த்திகேயன்

1 mins read
957a596c-7157-4e3e-99cc-a105c2e5e174
-

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது குறித்து, "சில வேலைகள் மகிழ்ச்சியைத் தரும்; சில கௌரவத்தையும் பெருமையையும் தரும். சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் அனைவருக்குமே பெருமை தேடித் தரும். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் போன்ற இளையோருடன் இணைந்து பயணம் செய்வதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துகள்," என்று கமல்ஹாசன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கெனவே கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படத்தைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.