தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிஷாவுக்கு 40 வயது

1 mins read
ce98e245-10a1-4276-a230-5f4c47b8037a
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1', பொன்னியின் செல்வன் 2' படங்களில் குந்தவை கதாபாத்திரத்தில் அசத்திய திரிஷா. படம்: பிங்க்வில்லா -

கோலிவுட்: நடிகை திரிஷா இன்று (வியாழக்கிழமை, 4 மே) தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் இவர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்திலும் ஹீரோயினியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

2002ஆம் ஆண்டு இயக்குநர் அமீரின் முதல் படமான 'மௌனம் பேசியதே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், 'கில்லி', 'சாமி', 'உனக்கும் எனக்கும்', 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' உட்பட பல சூப்பர்ஹிட் படங்களை வழங்கியிருக்கிறார்.

அண்மையில் வெளியான மணி ரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1', 'பொன்னியின் செல்வன் 2' ஆகிய படங்களில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரமும் பிரபலமடைந்துவிட்டது.

தெலுங்குப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ள திரிஷா, இன்னும் இளமை அழகுடன் வலம் வருவது ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளது.