இளையர்களைக் கவர வரும் 'பீட்சா 3: த மம்மி'

இளையர்களைக் கவர வரும் 'பீட்சா 3: த மம்மி'

2 mins read
9827bcd0-335c-482b-9e73-a24dc6ff96ad
-

அண்­மை­யில் வெளி­யான 'பீட்சா 3: த மம்மி' படத்­தின் குறு­முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் பெரும் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கத்­தில், விஜய் சேது­பதி நடிப்­பில் வெளி­யான 'பீட்சா' பெரும் வெற்றி பெற்­றது. அடுத்து அசோக் செல்­வன் நடிப்­பில் வெளி­யான 'பீட்சா 2: வில்லா' படத்­துக்­கும் இளை­யர்­கள் மத்­தி­யில் வர­வேற்பு கிடைத்­தது.

இப்­போது மூன்­றாம் பாகத்தை மோகன் கோவிந்த் இயக்க, சி.வி.குமார் தயா­ரிக்­கி­றார். அஸ்­வின் நாய­க­னா­க­வும் பவித்ரா மாரி­முத்து நாய­கி­யா­க­வும் நடிக்­கின்­ற­னர்.

மேலும்,, ரவீனா தாஹா, காளி வெங்­கட் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"பேய் என்­பது உண்­மை­யா­கவே இருக்­கி­றதா, இல்­லையா, அது வரு­வ­தற்­கான அறி­கு­றி­கள் ஏதும் உள்­ள­னவா என்­கிற கேள்­வி­க­ளுக்கு எல்­லாம் இந்­தப் படத்­தில் இட­மில்லை. ஆனால் இது நூறு விழுக்­காடு திகில் பட­மாக உரு­வா­கிறது.

"மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பே படப்­பி­டிப்பை தொடங்க திட்­ட­மிட்­டி­ருந்­தோம். கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் முடக்­கிப் போட்­டு­விட்­டது.

"உணர்­வு­பூர்­வ­மான காட்­சி­களும் திகி­லும் இணை­யும்­போது ரசி­கர்­க­ளுக்கு நிச்­ச­யம் பி­டித்­துப்­போ­கும். 'பீட்சா' என்ற தலைப்பே ரசி­கர்­களை திரை­ய­ரங்­குக்கு அழைத்து வரும். இதை எளி­தில் சாதித்­து­வி­ட­லாம். ஆனால் அந்த தலைப்பு ஏற்­ப­டுத்­தும் மாயா­ஜா­லத்­துக்கு இணை­யாக நல்ல கதை­யைச் சொல்ல வேண்­டிய பொறுப்­பும் சவா­லும் எனக்கு உள்­ளன.

"விஜய் சேது­பதி அண்­ணா­வுக்கு முதல் பாகம் வெற்­றிப்­பாதையை அமைத்­துக் கொடுத்­தது. இரண்­டாம் பாகம் அசோக் செல்­வன் இன்ற இளம் நாய­க­னுக்கு பெரும் திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது.

"இப்­போது 'பீட்சா' மூன்­றா­வது பாகத்தை இயக்­கும் அறி­முக இயக்­கு­ந­ரான எனக்­கும் பட நாய­கன் அஸ்­வி­னுக்­கும் இப்­ப­டம் கைகொ­டுக்­கும் என உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்­கி­றார் மோகன் கோவிந்த்.