'ஆந்தை' என்ற தலைப்பில் உருவாகும் திரைப்படத்துக்கு சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார்.
"இரவு என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஆந்தை. மேலும் அபசகுணம் கொண்ட பறவை என்றும் கூறுவர். ஒரே இரவில் நடக்கும் பல திருப்பங்களைக் கொண்ட சம்பவங்களை விவரிக்கும் திகில் கதை இது.
"இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், டெல்லி, அறந்தாங்கி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
"இதில் விகாஷ் கதாநாயகனாகவும் யாழினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், மதன்பாப், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா ஆகியோரும் உள்ளனர்.
"'என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா' என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கிய நவீன் மணிகண்டன், 'ஆந்தை' திரைப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவும் செய்கிறார்.
"எஸ்.ஆர்.ராம் இசையமைக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணியளவில் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஜாம்பவான் திரு. கே. பாக்யராஜ் 'ஆந்தை' திரைப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியை வெளியிட்டார்," எனப் படக்குழுவினர் தெரிவித்தனர்.