'முக்கியத்துவம் வேண்டும்'

'முக்கியத்துவம் வேண்டும்'

3 mins read
3ccccc34-3820-452e-a306-662b52dde8a2
-

கதா­நா­ய­கி­களை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­க­ளின் எண்ணிக்கை அதி­க­ரிக்க வேண்­டும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்­டும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

அவ்­வாறு நடந்­தால்­தான் தமிழ்த் திரையு­ல­கம் உண்­மை­யா­கவே வளர்ச்சி அடைந்­த­தாக அர்த்­தம்," என்று அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

திரை­யு­ல­கம் மட்­டு­மல்­லாது எந்த விவ­கா­ர­மாக இருந்­தா­லும் அது­கு­றித்து துணிச்­ச­லாக கருத்து­களை தெரி­விக்­கக்கூடி­ய­வர் ஐஸ்­வர்யா.

தொடர்ந்து வித்­தி­யா­ச­மான கதைக்­களங்கள், கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கி­றார்.

தன்னை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் சர்ச்சை­கள் குறித்­தெல்­லாம் அவர் கவலைப்­படு­வ­தில்லை. இளம் வய­தி­லேயே ஒரு குழந்­தைக்குத் தாயாக நடிப்­பது குறித்து அண்­மை­யில் அவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, கதை பிடித்­தி­ருந்தால் நூறு குழந்­தை­க­ளுக்­குத் தாயாக நடிக்­க­வும் தாம் தயா­ராக இருப்பதாக அதி­ர­டிப் பதிலை அளித்­தார்.

தொடர்ச்­சி­யாக அழுத்­த­மான கதை­கள், பெண்­களை மைய­மாகக் கொண்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கி­றீர்­களே என்று கேள்வி எழுப்­பி­னால், அழ­கான புன்­சி­ரிப்­பு­தான் ஐஸ்­வர்­யா­வின் முதல் பதி­லாக வெளிப்­படு­கிறது.

"அப்­ப­டி­யெல்­லாம் எதுவும் முடி­வெ­டுத்து செயல்­ப­டு­வ­தில்லை. சர்ச்சைக்­குள்­ளா­கும் விவகா­ரங்­களில் மட்­டுமே நடிக்க வேண்­டும் என்­பது எனது முடி­வல்ல. அதே­ச­ம­யம் நான் நடித்த ஒரு திரைப்­ப­டம் சர்ச்­சைக்கு ஆளா­கிறது எனில் அதற்கு நான் மட்­டுமே காரணம் அல்ல.

"என்­னைத் தேடி வரும் இயக்­கு­நர்­கள் கூறும் கதை­களைக் காது­கொ­டுத்­துக் கேட்கி­றேன். அந்த கதை­யில் என்ன இருக்­கிறது, எனது பங்­க­ளிப்பு ரசி­கர்­க­ளால் எவ்­வாறு ஏற்­றுக்­கொள்­ளப்­படும், அந்­தக் கதை­யும் அதை வைத்து உரு­வா­கும் படமும் ரசி­கர்­க­ளி­டம் எப்­ப­டிப் போய்ச் சேரும் என்று யோசிப்­பேன். இதற்கு முன்பு 'இந்­தி­யன் கிச்­சன்' படத்­தில் நடித்­தேன். அதைப் பார்த்த இந்­திய இயக்­கு­நர் ஒரு­வர் என்னை வெகு­வாகப் பாராட்­டி­னார். ரசி­கர்­களும் பாராட்­டத் தயங்­கவில்லை.

"என் வீட்­டில் நானே இப்­ப­டித்­தான் நடந்­து­கொள்­கி­றேன். உங்­க­ளு­டைய இயல்­பான நடிப்பு பல விஷ­யங்­களை எனக்கு உணர்த்­து­கிறது. மன­த­ள­வில் என்னை வெகு­வா­கப் பாதித்­தது.

"பெரிய இயக்­கு­நர் ஒரு­வர் இவ்­வாறு வெளிப்­ப­டை­யா­கப் பேசிப் பாராட்­டு­வது என்­பது திரை­யு­ல­கில் பெரிய விஷ­யம்­தான். இப்­படி ஒரு படம் எத்­த­கைய பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கிறது என்­ப­து­தான் முக்­கி­யம்," என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

சோக­மான கதா­பாத்­தி­ரங்­களை மட்­டுமே தாம் தேர்ந்­தெ­டுப்­ப­தா­கக் கூறப்­ப­டு­வதை மறுப்­ப­வர், தேடி வரும் கதை­களில் பிடித்­த­மா­ன­வற்றைத் தேர்வு செய்­வ­தா­கச் சொல்­கி­றார்.

"சோக­மான பெண் கதா­பாத்­தி­ரங்­களை உரு­வாக்­கு­வது நான் அல்ல. இயக்குநர்­கள்­தான் அப்­ப­டிப்­பட்ட கதை­க­ளு­டன் என்­னி­டம் வரு­கி­றார்கள். ஒரு­வேளை நகைச்­சு­வை­யான, ஜன­ரஞ்­ச­க­மான கதை­கள் அதிக எண்­ணிக்­கை­யில் தேடி­வந்தால், அவற்­றில் நடிக்­க­வும் நான் தயாராக உள்­ளேன்.

"மற்ற கதா­நாயகிகள் போல் எனக்­கும் காதல் பாடல்­களைப் பாடி, நாய­கர்­க­ளு­டன் நட­ன­மா­டும் ஆசை உள்­ளது. ஆனால் இயக்­கு­நர்­கள் என்னை அப்படிப் பார்க்க விரும்­ப­வில்லை எனும்­போது நான் செய்­வ­தற்கு ஒன்றும் இல்லை. கதா­நா­ய­கி­களை முதன்­மைப்­ப­டுத்தி நிறைய படங்­கள் வர­வேண்­டும். பெண்­களை வைத்து சொல்­லப்­பட வேண்­டிய கதை­கள் ஏரா­ள­மாக உள்­ளன. இன்­றைய சூழ­லுக்கு அப்­ப­டிப்­பட்ட படங்­கள் உரு­வாக வேண்­டி­யது அவ­சி­யம்.

"எனக்கு சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் நாயகியாக நடிக்க ஆசை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற விருப்ப மும் உள்ளது. ஒரு படம் முழுவதும் பயங்கர வில்லத்தனம் செய்யும் நாயகியாகவும் அம்மன் கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.

, :

தமி­ழ­கத்  