புதிய இணையத் தொடரில் நடிக்கிறார் அதர்வா. பிரசாத் முருகேசன் இயக்கும் இத்தொடருக்கு 'மத்தகம்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
"மத்தகம் என்பது யானையின் முன் நெற்றியைக் குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தை தன்னை காத்துக்கொள்ளவும் தாக்கவும் பயன்படுத்தும்.
"முப்பது மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களின் தொகுப்புதான் கதை. இதை இயன்றவரை சுவராசியமாக சொல்ல முயற்சி செய்கிறோம்.
"நாயகனுக்கும் வில்லனுக்கும் ஓர் இரவில் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இப்படத்தின் காட்சி அமைப்பு ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும்.
"தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாகவும் அதேசமயம் யதார்த்தை மீறாத வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன," என்கிறார் இயக்குநர்.
இத்தொடரில் நாயகியாக நிகிலா விமல் நடிக்க, 'ஜெய் பீம்' இதில் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். மேலும் இயக்குநர் கௌதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, வடிவுக்கரசி, மூணாறு ரமேஷ், ரிஷிகாந்த் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
இத்தொடர் விரைவில் வெளியீடு காண உள்ளது.

