சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' திரைப்படம் அதிரடி சண்டைக்காட்சிகளும் உணர்வுபூர்வமான குடும்ப விவகாரங்களையும் உள்ளடக்கிய படைப்பாக உருவாகிறதாம்.
தவிர, அவரது வழக்கமான நகைச்சுவையும் ஆடல் பாடல்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திரைகாண உள்ளது 'மாவீரன்'. சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்துள்ளார்.
பரத் சங்கர் இசை அமைக்க, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது.
"இதுவரை நான் நடித்திராத கதைக்களத்தில் உருவாகிறது 'மாவீரன்'. கதைக்களத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியையும் படமாக்குவது பெரும் சவாலாக இருந்தது.
"ஆனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்தது பாராட்டுக்குரியது.
"அனைவரையும் ஒருங்கிணைத்து நல்ல படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின்.
"இப்படத்தின் வெற்றியில் அவரது பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்," என்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தில் அதிதி சங்கர் நாயகியாகவும் முன்னாள் நடிகை சரிதா, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்றுள்ளனர்.

