தமிழ்த் திரையுலகில் புதிய பெண் இசையமைப்பாளர் அறிமுகமாகிறார். அவர் பின்னணிப் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.
நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டெஸ்ட்' படத்துக்கு சக்திஸ்ரீ தான் இசையமைப்பாளர்.
தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் இசையமைப்பாளராக மாறியதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'டெஸ்ட்' படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, ராஷி கன்னா ஆகியோரும் உள்ளனர். சசிகாந்த் இயக்குகிறார்.
கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படம் இது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.