திரையுலகில் தாம் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை மொத்தமாக இழக்க நேரிடும் இக்கட்டில் சிக்கி உள்ளதாக நடிகை சதா தெரிவித்துள்ளார்.
அண்மைய காணொளிப் பேட்டி ஒன்றில் அவர் கண்ணீர் சிந்தியபடி பேசுவதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். சம்பாதித்த பணத்தை வைத்து மும்பையில் உணவகம் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறேன். "நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்ததால் உணவகம் பிரபலமாகி உள்ளது.
"இந்நிலையில், உணவகம் இயங்கி வரும் இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை காலி செய்யச் சொல்கிறார். அதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளேன்," என்று கண்ணீர் சிந்துகிறார் சதா.