காதல் காட்சியைப் படமாக்கிய போது தாம் விபத்தில் சிக்கிய தாகச் சொல்கிறார் விஜய் ஆண்டனி. இவர் தயாரித்து, இசையமைத்து, இயக்கி உள்ள படம் 'பிச்சைக்காரன் 2'. படத்தின் பாடல் காட்சியை மலேசியாவின் லங்காவி தீவில் படமாக்கி உள்ளனர்.
விஜய் ஆண்டனியும் நாயகி காவ்யா தாப்பாரும் கடலில் ஓடும் 'ஜெட் ஸ்கி'யில் பயணம் செய்வதுபோல் அக்காட்சியைப் படம் பிடித்துள்ளனர்.
"அப்போது எதிர்பாராதவிதமாக நாங்கள் சென்ற 'ஜெட் ஸ்கி', ஒளிப்பதிவாளரின் படகு மீது மோதியது. அதனால் நான் தூக்கி வீசப்பட்டேன்.
"எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த காவ்யாவும் ஒளிப்பதிவாளரின் உதவியாளர் அர்ஜூனும்தான் என் உயிரைக் காப்பாற்றினர். நான் மறுபிறவி எடுக்க அவர்கள்தான் காரணம்," என்கிறார் விஜய் ஆண்டனி.