தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத் துளி­கள்

2 mins read
c2d300e7-61aa-4ebe-97f9-fe8f1365c5a8
-
multi-img1 of 2

 நடிப்பு, பட இயக்கம், பாடல் எழுதுவது, பாடு வது என எப்போதும் ஏதாவது ஒரு வேலை யில் ஈடுபட்டுள்ளார் தனுஷ். இந்நிலையில் நடிகை அனுஷ்கா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் 'மிஸ் ஷெட்டி மிஸ்ஸஸ் பொலிஷெட்டி' என்ற தெலுங்கு படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தனுஷ் பாட உள்ளார். இப் படத்திற்கு ரதன் என்பவர் இசையமைக் கிறார். தனுஷ் நடித்த 'வாத்தி' படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் பாடும் நேரடித் தெலுங்குப் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் உருவாகி உள்ள 'வீரன்' திரைப் படம் ஜூன் 2ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிரா ராஜ் கதாநாயகி யாகவும் வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வ ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்புத் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல என இப்போது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என சுவரொட்டி ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 இருசக்கர வாகனத்தில் உலக நாடுகளை வலம் வர உள்ளார் அஜித். அவர் எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார் எனும் தகவல் வெளியாகி உள்ளது.

 'லியோ' படப்பிடிப்பில் அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.