குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'ஓ மை டார்லிங்'. இது மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம். ஆல்பிரட் டி சாமுவேல் இயக்கிஉள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் சுவரொட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 'கண்ணீர் அஞ்சலி' எனக் குறிப்பிடப்பட்டு, அனிகாவின் புகைப்படம் ஒன்று அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும், 'செல்வி நந்தினி 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அகால மரணமடைந்தார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சுவரொட்டியைப் பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் இது படத்துக்கான மறைமுக விளம்பரம் எனப் படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் நிம்மதி அடைந்தாலும், இதுபோன்ற விளம்பர உத்திகளைத் தவிர்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறிஉள்ளனர்.