திரிஷாவுக்கு இன்ப அதிர்ச்சி

1 mins read
accf3bf6-0bfb-47da-bce5-7973fc3c9449
-

திரி­ஷா­வின் பிறந்­த­நாளை 'லியோ' படக்­கு­ழு­வி­னர் சிறப்­பா­கக் கொண்­டாடி உள்­ள­னர்.

அண்­மை­யில் தனது 40வது பிறந்­த­நா­ளைக் கொண்­டா­டி­னார் திரிஷா. இதை­ய­டுத்து, விஜய்­ உடன் அவர் இணைந்­துள்ள புகைப்­ப­டத்தை வெளி­யிட்டு 'லியோ' படக்­குழு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது.

'லியோ' படத்­தின் அடுத்­த­கட்ட படப்­பி­டிப்­பில் திரிஷா பங்­கேற்­றுள்­ளார். தற்­போது விஜய் பங்­கேற்­கும் சண்­டைக்­காட்­சி­களும் திரி­ஷா­வு­டன் அவர் இணைந்து நடிக்­கும் காட்­சி­களும் பட­மாக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், படப்­பி­டிப்­புக்கு வந்த திரி­ஷா­வுக்கு இன்ப அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. 'லியோ' படக்­கு­ழு­வி­னர் அவ­ருக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­விக்­கும் வித­மாக மிகப்­பெ­ரிய கேக் ஒன்­றைத் தயார் செய்­தி­ருந்­த­னர்.

அதை வெட்­டச் செய்து படக்­கு­ழு­வி­னர் பிறந்­த­நாள் வாழ்த்­துப்­பா­ட­லைப் பாடி­ய­போது நெகிழ்ந்து போனா­ராம் திரிஷா.

படக்­கு­ழு­வினருக்கு நன்றி தெரி­வித்­த­து­டன், இது­போன்ற அன்­பா­ன­வர்­க­ளின் வாழ்த்து கூடு­தல் சிறப்பு வாய்ந்­தது என்று தனக்கு நெருக்­க­மா­ன­வர்­களிடம் கூறி­யுள்­ளா­ராம்.

திரிஷா நடிப்­பில் உரு­வா­கும் 'தி ரோட்' என்ற புதுப்­ப­டம் மிக விரை­வில் ஐந்து மொழி­களில் வெளி­யாக உள்ளது.