நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி அவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடிஎனத் தெரிகிறது.
மும்பை ஜூகு பகுதியில் உள்ள ஆடம்பரமான பங்களாவில் கணவருடன் வசிக்கிறார் ஐஸ்வர்யா ராய். இந்தப்் பங்களாவின் மதிப்பு ரூ.112 கோடி என கூறப்படுகிறது.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் இவர் வாங்கியுள்ள ஐந்து படுக்கை அறைகள் 5,500 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் விலை ரூ.21 கோடியாம்்.
மேலும், மும்பை வோர்லி பகுதியில் ரூ.41 கோடி மதிப்புள்ள வீடு உள்ளிட்ட மேலும் பல சொத்துகள் உள்ளன. ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யாவிடம் நான்கு சொகுசுக் கார்களும் உள்ளன.
கதை பிடித்திருக்கும் பட்சத்தில் சம்பளம் குறித்தெல்லாம் ஐஸ்வர்யா கவலைப்படுவதில்லை.
மேலும் கால்ஷீட் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தி விடுகிறார்.
திரைப்படங்களில் நடித்தபடியே குடும்பப் பொறுப்புகளையும் நிறைவேற்றி வருபவர், சத்தமின்றி பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து தன்னால் இயன்ற அளவுக்கு சமூக சேவையும் ஆற்றி வருகிறார்.