வருகிறார் 'மாமன்னன்'

வருகிறார் 'மாமன்னன்'

3 mins read
ddfd40c7-12f1-40b6-b6ce-bfee6018006e
-

உத­ய­நிதி ஸ்டா­லின் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'மாமன்­னன்' திரைப்­ப­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­படுத்தி உள்­ளது.

'பரி­யே­றும் பெரு­மாள்', 'கர்­ணன்' என்று அடுத்­த­டுத்து நல்ல படைப்­பு­க­ளைத் தந்து ரசிகர்­களை தன் பக்­கம் திரும்­பிப் பார்க்க வைத்­த­வர் இயக்­கு­நர் மாரி செல்­வ­ராஜ்.

அதன் பின்­னர் மீண்­டும் தனுஷை இயக்­கப் போவ­தா­க­வும் துருவ் விக்­ர­மு­டன் இணைந்­துள்­ள­தா­க­வும் பல்­வேறு தக­வல்­கள் வெளி­வந்­தன. ஆனால் திடீ­ரென்று 'மாமன்­னன்' படம் குறித்த அறி­விப்பை வெளி­யிட்­டார் மாரி.

"என்­னு­டைய முதல் இரண்டு படைப்­பு­க­ளை­யும் பார்த்த பின்­னர் தொடர்­பு­கொண்­டார் உத­ய­நிதி. ஆனால் இரு­மு­றை­யும் அவ­ரு­டன் இணைந்து செயல்­படு­வ­தற்­கான சூழல் அமை­ய­வில்லை.

"துருவ் விக்­ரமை வைத்து விளை­யாட்டு­டன் தொடர்­பு­டைய படத்தை இயக்­கு­வ­தற்­கான வேலை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­போது தான் மீண்­டும் தொடர்­பு­கொண்­டார் உத­ய­நிதி.

"நடிப்­பைக் கைவி­டும் முடி­வில் இருப்­ப­தா­க­வும் கடை­சிப் படத்­தில் என்­னு­டன் இணைந்து பணி­யாற்ற விரும்­பு­வ­தா­க­வும் கூறி­னார். நான் முன்பே ஏற்­றுக்­கொண்ட பணி­கள் குறித்து விவ­ரித்­தேன்.

"உடனே தனு­ஷை­யும் விக்­ர­மை­யும் அவரே தொடர்­பு­கொண்டு பேசி, 'மாமன்­னன்' படத்தை தொடங்க வழி­வகை செய்­தார். ஒற்றை வரிக் கதை­யைத்­தான் அவ­ரி­டம் கூறி­யி­ருந்­தேன். படம் இயக்­கு­வது உறு­தி­யா­னதும் அந்த ஒற்றை வரியை முழு­மை­யான கதை­யாக எழுதி முடித்து, திரை வடி­வத்­துக்கு ஏற்ப மாற்­றி­னேன்," என்று விவ­ரிக்­கி­றார் மாரி செல்­வ­ராஜ்.

'மாமன்­னன்' முழு நீள அர­சி­யல் பட­மாக உரு­வாகி உள்­ள­தாம். தாம் எழு­திய கதையை உத­ய­நிதி ஏற்­றுக்­கொள்­வாரா என்ற சந்­தே­கம் இருந்­த­தா­கக் குறிப்­பி­டும் மாரி, தமி­ழ­கத்­தின் மேற்கு மாவட்ட அர­சி­ய­லைப் பற்றி இப்­ப­டம் அல­சும் என்­கி­றார்.

"ஆனால் உதயநிதிக்கு கதை ரொம்­பப் பிடித்­தி­ருந்­தது. ஒரு­வர் நம்மை அள­வுக்கு அதி­க­மாக நம்­பி­னால் ஒரு­வித பயம் ஏற்­படும் என்­பர். எனக்­கும் அந்­தப் பயம் வந்­தது.

"வடி­வேலு, பகத் ஃபாசில் நடிக்க வேண்­டும், சேலத்­தில் படப்­பி­டிப்பு, இவ்­வ­ளவு நாள் கால்­ஷீட் தேவை என்று நான் கேட்ட அனைத்­தை­யும் ஏற்­பாடு செய்­தார் உத­ய­நிதி. அவர் மீதான நன்­ம­திப்பு நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே போகிறது.

"ஆளும் கட்­சி­யில் முக்­கிய பொறுப்­பில் இருக்­கி­றார். ஆனால் எல்­லா­வற்­றை­யும் உடைத்­துக்­கொண்டு தயக்­க­மின்­றிப் பழ­கி­னார். தோன்­றி­ய­தைச் சொல்ல இடம் கொடுத்­தார். அவரது எளிமை என்னைக் கவர்ந்தது," என்­கி­றார் இயக்குநர் மாரி.

முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் வடி­வேலு நடிப்­ப­தாக இவர் சொன்­ன­தைக் கேட்டு உத­ய­நி­தி­யும் பகத் ஃபாசிலும் அதிர்ச்சி அடைந்­த­ன­ராம். எனி­னும் இரு­வ­ருமே நடிக்க முன்­வந்­த­னர். வடி­வேலு ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க தமிழ்த் திரை­யு­ல­கில் பலர் உள்­ள­னர். ஆனால் நான் அவர்­தான் நடிக்க வேண்­டும் என விரும்­பி­னேன். அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்ற வேண்­டும் என்­பது என் கனவு. அது நிறை­வேறி உள்­ளது.

படத்தின் கதாநாயகி கீர்த்தி உட்பட அனைவருமே என்னை நன்கு புரிந்து வைத்துள்ளனர். எதற்காக இந்தப் படத்தை எடுக்க விரும்பினேன் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்துள்ளது.

"சமத்துவம் குறித்துப் பேசுகிற நான் ஏன் மாமன்னன் என்ற தலைப்பை தேர்வு செய்தேன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்வியை நானும் முன்வைக்கிறேன்.

"தலைப்புக்கான காரணத்தைச் சொன்னதும் உதயநிதி பொருத்த மாக உள்ளதாகத் தெரிவித்தார். படக் குழுவில் உள்ள அனைவருமே இந்தத் தலைப்பை ஏற்றுக்கொண்டனர்.

காணொளி மூலமாகத்தான் ஏ.ஆர்.ரகுமானிடம் முதன் முறையாகப் பேசினேன். ஒற்றை வரியில் கதையை விவரித்ததும், அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. உடனே முழுக் கதையையும் விவரிக்கச் சொன்னார். அதன் பிறகு வழக்கம்போல் அருமையான இசையை வழங்கி உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி," என்கிறார் மாரி செல்வராஜ்.

உதயநிதி ஸ்டாலின்

, :

தமி­ழ­கத்  