அஜித்தின் அடுத்த படத்தில் அவரது ஜோடியாக நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஐஸ்வர்யா ராய், திரிஷா, கங்கனா ரணாவத், கத்ரினா கைஃப், கரீனா கபூர் ஆகிய ஐந்து நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
முன்னதாக அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து, நாயகியும் மாற்றப்படுகிறார். ஐஸ்வர்யா ராய் ஏற்கெனவே 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்'' படத்தில் நடித்துள்ளனர். அஜித்தும் திரிஷாவும் 'ஜி', 'கிரீடம்', 'மங்காத்தா' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

