'போர்குடி' சாதிப் படமல்ல; இயக்குநர் விளக்கம்

'போர்குடி' சாதிப் படமல்ல; இயக்குநர் விளக்கம்

1 mins read
018a44ad-01b4-4b12-a765-18869257fba1
-

இப்­போ­தெல்­லாம் ஒரு திரைப்்­படம் வெளி­யா­கும் முன்பே சர்ச்சை தொடங்­கி­வி­டு­கிறது. அந்த வகை­யில், 'போர்­குடி' என்ற படத்­துக்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இது ஒரு சாதிப்­ப­டம் என்று ஒரு தரப்பு கூறு­கிறது. ஆனால் அது தவ­றான தக­வல் என அப்­ப­டத்­தின் இயக்­கு­நர் ஆறு­பாலா கூறி­யுள்­ளார். போர்­குடி என்ற சாதியை உயர்த்­திப்பிடிப்­பது தமது நோக்­க­மல்ல என்று அவர் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"வன்­கொ­டுமை தடுப்­புச் சட்டம் நல்ல நோக்­கத்­துக்­காகக் கொண்டு வரப்­பட்­டது. ஆனால் அது தவ­றா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இத­னால் பல்­வேறு தரப்­பி­ன­ரும் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள். அது­கு­றித்­து­தான் இந்­தப் படத்­தில் அல­சப்­பட்­டுள்­ளது.

"பொரு­ளி­யல் ரீதி­யில் பின்­தங்கியுள்ள மக்்களை மேலும் அதல பாதா­ளத்­துக்கு தள்­ளும் முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

"நம் சமூ­கத்­துக்கு ஏற்­பட்டுள்ள இழப்­பு­க­ளை­யும் சில­ருக்கு கிடைக்க வேண்­டிய நியா­யத்­தை­யும் புரிய வைக்­கும் முயற்சி இது. இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன்," என்­கி­றார் இயக்­கு­நர் ஆறு­பாலா.