நடிகர் பிரசன்னா, சினேகாவுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன.
இதையொட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரசன்னா, தங்கள் இருவரையும் மையப்படுத்தி கடந்த காலங்களில் ஏராளமான வதந்திகள் வெளியானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"என் வாழ்க்கையில் பல சிறப்புகள் உள்ளன என்றாலும் உனது (சினேகா) கரங்களைப் பற்றிய பிறகே நிறைய கற்றுக்கொண்டேன்.
"நம்மைப் பற்றி வெளியான அந்த மில்லியன் கணக்கான வதந்திகள் தவிடுபொடியாகட்டும்.
"உன்னுடைய அன்பான புன்னகையால் எனக்கான உலகத்தை நீ அற்புதமானதாக மாற்றியுள்ளாய்," என்று பிரசன்னா தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் திரையுலகத்தினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'ஃபர்ஹானா' திரைப்படத்தின் கதை, தாம் இதுவரை கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று என்கிறார் இயக்குநர் செல்வராகவன். "இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இக்கதையை அழகாக இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகுப்படுத்தி உள்ளார். இதுபோன்ற காவிய படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை," என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்
செல்வராகவன்.
தர்புகா சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'முதல் நீ முடிவும் நீ'. இப்படத்தில் இடம்பெற்ற 'முதல் நீ முடிவும் நீ' என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

