தீபிகா கூறும் அறிவுரை

தீபிகா கூறும் அறிவுரை

1 mins read
9076c609-b29c-4302-98dd-998f5eae627d
-

சிறு வயது முதலே வேறு வேறு இடங்­களில் வள­ரும் இரண்டு பேர் திரு­மண பந்­தத்­தில் இணை­யும்­போது அவர்­க­ளின் எண்­ணங்­கள் நிச்­ச­யம் ஒரே மாதி­ரி­யாக இருக்­காது என்­கி­றார் தீபிகா படு­கோன்.

இரு­வர் மீதும் பிறந்து வளர்ந்த சூழல், சமூக வாழ்க்கை, சக மனி­தர்­க­ளின் ஆலோ­சனை ஆகி­ய­வற்­றின் தாக்­கம் இருக்­கும் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்த அம்­சங்­களை நினை வில் வைத்­துக்­கொண்­டால் நிறைய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண­லாம். வித்­தி­யா­ச­மான பின்­ன­ணி­யில் இருந்து வந்த இரு­வர் கண­வன் மனை­வி­யாக ஆன பின்­னர் கருத்து வேறு­பாடு கள் வரு­வது இயல்பு. அந்த நேரத்­தில் கொஞ்­சம் பொறுமை யோடு நடந்துகொள்ள வேண்­டும்.

"நமது பெற்­றோரை அணு­கிப் பிரச்­சி­னை­களை சொன்­னால் அவர்­கள் சரி­யான தீர்வை சொல் வார்­கள். நம் பெற்­றோர் மகிழ்ச்சி யான தாம்­பத்­திய வாழ்க்­கையை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்கி றார்­கள்.

"அவர்­க­ளி­ட­மி­ருந்து இன்­றைய தலை­முறை கற்­றுக் கொள்ள வேண்­டிய விஷ­யங்­கள் நிறைய உள்­ளன," என்­கி­றார் தீபிகா.