அனைத்துலக மகளிர் தினத்தை யொட்டி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணிக்கு தமிழக ஆளுநர் விருது அளித்து கௌரவிக்க உள்ளார்.
பல்வேறு குடும்ப சிரமங்களுக்கு மத்தியில் தமிழ்த் திரை யுலகத்தில் முன்னணி நடிகை யாக உருவெடுத்துள்ளார் ஐஸ் வர்யா. இதில் அவரது தாயாரின் பங்கு மிக முக்கியமானது.
தொழில் ரீதியிலும் தனிப்பட்ட வகையிலும் தனது தாயார்தான் சிறந்த வழிகாட்டியாக இருந்தார் என ஐஸ்வர்யா பலமுறை பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
"சென்னையில் பிறந்து வளர்ந்த நான் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக என கலைப்பணியைத் தொடங்கி னேன். கல்லூரியில் படித்துக் கொண்டே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சின்னச் சின்ன வேலைகளைச் செய்தேன்.
"பெரிய வணிக வளாகங்க ளின் நுழை வாயில்கள் முன் பல மணிநேரம் கால்கடுக்க நின்றபடி, விளம்பரத் தாள்களை விநியோகித்தேன். திரையுலகில் அறிமுகமான உடனேயே கதா நாயகியாக வளர்ந்துவிடவில்லை. சிறுசிறு வேடங்களில் நடித்துத் திறமையை நிரூபித்த பிறகே வளர முடிந்தது. என்னை சுதந்திரமாகச் செயல்பட வைத்து, வெற்றி தோல்விகளின்போது உடனி ருந்து வழிநடத்தியது என் தாயார் தான்," என்கிறார் ஐஸ்வர்யா.
தன் தாய்க்கு விருது கிடைப்பதைவிட வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் இருக்க முடியாது என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி நெகிழ்கிறாராம்.

