முதன்முறையாகத் தாம் ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்த மனநிறைவைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார் இளம் நாயகி கிரித்தி ஷெட்டி.
'கஸ்டடி' திரைப்படத்தில் தாம் ஏற்று நடித்த ரேவதி கதாபாத்திரத்தைதத் தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படத்தில் கிரித்தியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
"நான் இவ்வாறு சொல்வதால் இதுவரை நடித்த படங்களில் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். இதற்கு முன்பு இத்தகைய வேடங்களில் நடிக்கக்கூடிய அளவுக்கு என்னிடம் பக்குவமும் முதிர்ச்சியும் இல்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கக்கூடும்.
"ஆனால் 'கஸ்டடி' படத்தில் நடித்தபோது அவ்வாறான சிரமங்கள், குழப்பங்கள் ஏதுமில்லை. அதற்குக் காரணம் இயக்குநர் வெங்கட்பிரபு. அவர் ரேவதி கதாபாத்திரத்தை என் மனத்தில் ஆழமாக வேரூன்றச் செய்துவிட்டார்.
"என் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கதாபாத்திரத்தை அவர் என்னிடம் ஒப்படைத்தார். அந்த நம்பிக்கைதான் நம்மால் நடிக்க முடியும் என்ற எண்ணத்தை மனத்தில் ஏற்படுத்தியது.
"இதுபோன்ற வாய்ப்புகளும் கதாபாத்திரங்களும் தொடர்ந்து கிடைக்க வாய்ப்பில்லை. எனவே வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் படத்தை திரையரங்கில் பார்த்தபோது எனது நடிப்பு எனக்கே மிகவும் பிடித்துப்போனது. மேலும் ஒட்டுமொத்த படமும் மனநிறைவை அளித்தது," என்கிறார் கிரித்தி ஷெட்டி.
கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி இப்போது தமிழிலும் தெலுங்கிலுமாக நல்ல வாய்ப்புகள் அமைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது ஐந்து படங்களைக் கைவசம் வைத்துள்ளதாகச் சொல்கிறார்.
லிங்குசாமி இயக்கத்தில் நடித்த 'வாரியர்' படத்துக்குப் பிறகு 'கஸ்டடி' படமும் ஒரே சமயத்தில் இரு மொழிகளில் வெளியானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
தெலுங்கில் சரளமாகப் பேசுபவருக்குத் தமிழ் இன்னும் முழுமையாக வசப்படவில்லை. எனவே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
"ஒவ்வொரு படத்திலும் எனக்கான வசனங்களை முன்கூட்டியே கேட்டுப் பெற்று, படப்பிடிப்புக்கு முன்பு பயிற்சி மேற்கொள்வேன். குறிப்பாகத் தமிழ் வசனங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.
"வசனங்களுக்கான அர்த்தத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வதன் மூலம் தமிழ் மொழியையும் சிக்கலின்றி, பிழையின்றிக் கற்றுக்கொள்ள முடிகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் விரைவில் தமிழ் என் வசப்படும் என நம்புகிறேன்," என்கிறார் கிரித்தி.
கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளதை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுகிறாராம். தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கைகூடவில்லை என்றாலும் மிக விரைவில் கோடம்பாக்கத்தின் முன்னணி நாயகர்களுடன் இணைய முடியும் என நம்புவதாகச் சொல்கிறார்.
'கஸ்டடி' படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளதை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுகிறாராம். தமிழில் சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு கைகூடவில்லை என்றாலும் மிக விரைவில் முன்னணி நாயகர்களுடன் இணைய முடியும் என நம்புகிறார்.
"ஒவ்வொரு படத்திலும் புதுப்புது அம்சங்களைக் கற்றுக் கொள்கிறேன். கற்றல் என்பது என்றும் நின்றுவிடக்கூடாது," என்கிறார் கிரித்தி ஷெட்டி.
, :
தமிழகத்