'டக்கர்': சுவாரசிய மோதல்

'டக்கர்': சுவாரசிய மோதல்

3 mins read

சித்­தார்த்­து­டன் இணைந்து நடிக்­கும் 'டக்­கர்' படத்­தின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் மன­தைக் கவரத தயா­ராகி வரு­வ­தா­கச் சொல்­கி­றார் திவ்­யன்ஷா.

கார்த்­திக் ஜி கிரிஷ் இயக்­கத்­தில் உரு­வா­கும் படம் இது. இயக்­கு­நர் சங்­க­ரின் சீட­ரான இவர், ஏற்­கெ­னவே 'கப்­பல்' என்ற படத்தை இயக்­கி­ய­வர்.

காத­லிக்க ஆசைப்­படும் நாய­கன், காதல் என்­றாலே வெறுக்­கும் நாயகி ஆகிய இரு­வ­ரும் ஒன்­றா­கப் பய­ணம் மேற்­கொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது. அப்­போது என்­ன­வெல்­லாம் நடக்­கிறது என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதை.

"இதென்ன வித்­தி­யா­ச­மான தலைப்பு என்று பல­ரும் கேட்­கி­றார்­கள். 'டக்­கர்' என்­றால் இந்தி மொழி­யில் மோதல் என்று அர்த்­த­மாம். எனக்­கும் அண்­மை­யில்­தான் இது தெரிய வந்­தது.

"இரண்டு பேருக்கும் இடையே ஏற்­படும் நெருக்­கம், மோதல் ஆகி­ய­வற்றை சுவா­ர­சி­ய­மா­கக் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார் இயக்­கு­நர்.

"பணக்­கா­ர­ராக வேண்­டும் என்ற வேகத்­து­டன் நக­ரத்­துக்கு வரும் இளை­யர் ஒரு­வர், அங்கு ஒரு பெண்­ணைச் சந்­திக்­கி­றார். இரு­வருக்­கும் வெவ்­வேறு குணா­தி­ச­யங்­கள் என்­ப­தால் இணைந்து செயல்­ப­டு­வ­தில் சிக்­கல் ஏற்­ப­டு­கிறது.

"எனி­னும், அனைத்­தை­யும் மீறி இரு­வ­ருக்­கும் இடையே ஒரு­வி­தப் புரி­தல் ஏற்­ப­டு­கிறது. அதற்­கேற்ற உடல் மொழி­யும் வெளிப்­ப­டும்­போது சுவா­ர­சி­யம் தொடங்­கும். படம் முழு­வ­தும் ஒரு­வித உற்­சா­கம் குடி­கொண்­டி­ருக்­கும். அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் அனு­ப­வித்து நடித்­தேன்," என்­கி­றார் திவ்­யன்ஷா.

இவர் தமி­ழில் முத­லில் ஒப்­பந்­த­மா­னது இந்­தப் படத்­துக்­குத்­தா­னாம். ஆனால், இதற்­குப் பிறகு ஒப்­புக்­கொண்ட 'மைக்­கேல்' படம் வெளி­யா­கி­விட்­டது.

இந்­தப் படத்­தின் கதைக்­கேற்ப அருமை­யாக நடித்­தி­ருப்­ப­தாக திவ்­யன்­ஷா­வைப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் கார்த்­திக் ஜி கிரிஷ்.

"காத­லில் எல்­லாம் எனக்கு நாட்­ட­மில்லை. என்­னு­டைய அழ­கு­தான் முக்­கி­யம் என்­றால் அதை அனு­ப­வித்­துக்­கொள். ஆனால், திரு­ம­ணம் குறித்­தெல்­லாம் பேச வேண்­டாம் என்­ப­து­தான் இப்­ப­டத்­தின் கதா­நா­ய­கி­யின் எண்­ணம்.

"அதைத் தகுந்த உடல் மொழி­யு­டன் வெளிப்­ப­டுத்­து­வது அவ்­வ­ளவு எளி­தல்ல. ஆனால், கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மை­யைப் புரிந்­து­கொண்டு, பக்­கு­வ­மா­க­வும் கச்­சி­த­மா­க­வும் நடித்­துள்­ளார் திவ்­யன்ஷா. அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது," என்­கி­றார் கார்த்­திக் ஜி கிரிஷ்.

சித்­தார்த்­தைப் பொறுத்­த­வரை, கோப­முள்ள இளை­ய­ராக இப்­ப­டத்­தில் வாழ்ந்து காட்­டி­யி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

'பண­மும் செல்­வ­மும் ஏன் ஒரு­சி­ல­ரி­டம் மட்­டும் குவிந்­து­கி­டக்­கிறது' என்று கேள்வி எழுப்­பும் இளை­ய­ராக நடித்­துள்­ளா­ராம் சித்­தார்த்.

"சித்­தார்த் அடிப்­ப­டை­யில் ஓர் இயக்­க­ந­ரும்­கூட. எனவே, ஒரு படத்தை தயா­ரிப்­ப­தி­லும் இயக்­கு­வ­தி­லும் உள்ள சிர­மங்­களை நன்கு உணர்ந்­த­வர். இல்­லை­யெ­னில் மணி­ரத்­னம் போன்ற மிகப்­பெ­ரிய இயக்­கு­ந­ரி­டம் பணி­யாற்றி இருக்க வாய்ப்­பில்லை.

"படப்­பி­டிப்­பின்­போது இயக்­கு­ந­ரின் பணி­யில் எந்த வகை­யி­லும் தலை­யிட மாட்­டார். அதே சம­யம் தனக்­கான கதா­பாத்­தி­ரத்­தை­யும் மொத்­தக் கதை­யை­யும் தனக்­குப் புரி­யும் வரை கேட்­டுக்­கொண்டே இருப்­பார்.

"எதை­யும் ஓர் இயக்­கு­ந­ரின் பார்­வை­யில் அணு­கக் கூடி­ய­வர். அத­னால் எடுக்­கப்­படும் காட்சி குறித்து அவ­ரி­டம் அதி­கம் விவ­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் இருக்­காது. இந்­தப் படத்­துக்­குப் பிறகு அவர் மீண்­டும் தமிழ்த் திரை­யு­லத்­தில் வெற்றி வலம் வரு­வார் என எதிர்­பார்க்­க­லாம்," என்­கி­றார் கார்த்­திக் ஜி கிரிஷ்.

'டக்­கர்' படத்­தில் குண்­டர் கும்­பல் தலை­வன், அவ­ரது மகன் என இரட்டை வேடங்­களில் நடித்­துள்­ளார் யோகி பாபு.

'வேலா­யு­தம்', 'தலைவா', 'தீரன் அதி­கா­ரம் ஒன்று' உள்­ளிட்ட படங்­களில் வில்­ல­னாக மிரட்­டிய அபி­மன்யூ சிங்­தான் 'டக்­கர்' படத்­தி­லும் வில்­லன்.

இவர்­க­ளைத் தவிர முனீஸ்­காந்த், ஆர்.ஜே.விக்­னேஷ்­காந்த் ஆகி­யோ­ரும் உள்­ள­னர்.

"காதல், அடி­த­டி­கள் நிறைந்த படம் என்­றாலே பாடல்­கள் மிக முக்­கி­யம் என்­பது சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.

இளை­யர்­க­ளுக்­குப் பிடித்­த­மான நிவாஸ் கே பிர­சன்­னா­தான் இசை அமைத்­துள்­ளார். 'மர­கத மாலை...', 'ரெயின்போ...' உட்­பட படத்­தில் மொத்­தம் ஐந்து பாடல்­கள்.

"அவற்­றுள் 'ரெயின்போ...' பாடலை சிம்பு பாடி­யுள்­ளார். ஆண்ட்­ரி­யா­வும் ஒரு பாட­லைப் பாடி­யுள்­ளார். இவர்­க­ளைத் தவிர, பிர­தீப், சின்­மயி, விஜய் யேசு­தாஸ், ஸ்வேதா மோகன் ஆகி­யோ­ரும் தங்­கள் வசீ­க­ரக் குர­லால் ரசி­கர்­களை மயக்க உள்­ள­னர்.

திவ்யன்ஷா

, :

தமி­ழ­கத்  