புதிய சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ராஷ்மிகா மந்தனா.
திரையுலகில் அறிமுகமான புதிதில் தாம் எதிர்கொண்ட சிறு பிரச்சினைகள்கூட மலைபோல் காட்சியளித்ததாக அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"ஆனால் எனது அனுபவங்கள், பிரச்சினைகளை நான் பார்க்கும் கோணத்தையே மாற்றி விட்டன. யோசித்து அடியெடுத்து வைத்தால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு இருக்கும் என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளேன்.
"சவால்களை எதிர்கொள்வதைப் பழக்கமாக்கி கொண்டால் எதுவும் கஷ்டமாகத் தெரியாது. ஒழுக்கத்தோடு பணி செய்கிறேன்.
"தொடர்ந்து படங்களில் நடிக்கும்போது கொஞ்சம் சோர்வாகத்தான் இருக்கும். இப்போது பல மொழிகளில் நடிக்கிறேன். முன்பை விட பரபரப்பான பெண்ணாக வலம் வருகிறேன்," என்கிறார் ராஷ்மிகா.
திரையுலகுக்கு வந்தபோது எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்து பின்னோக்கிப் பார்த்தால், அவை எல்லாம் இப்போது ஒரு பிரச்சினையாகவே தமக்கு தோன்றவில்லை என்றும் அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள் ளார் ராஷ்மிகா மந்தனா.