விக்ரம், ஐஸ்வர்யா ஜோடி

விக்ரம், ஐஸ்வர்யா ஜோடி

1 mins read
c5a098e4-cfce-4ee0-8c86-5cf21f8a261c
-

கமல்­ஹா­சன் நடிக்­கும் புதுப் படத்தை இயக்கி முடித்த கையோடு, விக்­ரமை நாய­க­னாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்­ளார் மணி­ரத்­னம்.

கமல், மணி­ரத்­னம் இயக்­கத்­தில் உரு­வா­கும் படத்தை கம­லின் சொந்­தப் படத் தயா­ரிப்பு நிறு­வ­னம் தயா­ரிக்­கிறது.

இப்­படத்­துக்­கான பணி­களைத் தொடங்­கி­விட்­டார் மணி­ரத்­னம்.

இதை­ய­டுத்து அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் விக்ரமை நாய­க­னாக வைத்து அவர் இயக்க உள்ள புதுப்­ப­டத்­தில் ஐஸ்­வர்யா ராய் நாய­கி­யாக நடிப்­பார் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஐஸ்­வர்­யா­வி­டம் கதை­யைச் சொல்லி, கால்­ஷீட்­டும் பெற்­று­விட்­டா­ராம் மணி­ரத்­னம். நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு வணிக அம்­சங்­கள் நிறைந்த பட­மாக இது இருக்­கும் என்­கிறது இயக்கு­நர் தரப்பு.

அதே­ச­ம­யம் விக்­ர­மின் நடிப்புப் பசிக்கு தீனி போடும் வகை­யில் அவ­ரது கதா­பாத்­திரத்தை மணி­ரத்­னம் செதுக்கி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.