காஜலின் புதிய தொழில்

காஜலின் புதிய தொழில்

1 mins read
cd95fa6f-7bba-44c3-a0f2-f0df0a1547d0
-

திரை­யு­ல­கில் சம்­பா­தித்த பணத்தை வேறு தொழில்­களில் முத­லீடு செய்­யும் புத்திசாலி நாய­கி­களில் காஜல் அகர்­வா­லும் இடம்­பெற்­றுள்­ளார்.

புதி­தாக அழகு சாத­னப் பொருள்­க­ளு­டன் தொடர்­பு­டைய தொழி­லைத் தொடங்கி உள்­ளார். கண் மை தயா­ரிப்­பும் விற்­ப­னை­யும்­தான் இந்­தப் புது நிறு­வ­னத்­தின் முக்­கி­ய­மான பணி­யாம்.

அண்­மை­யில் இந்­நி­று­வ­னத்­தின் தொடக்க விழாவை சிறப்­பாக நடத்­தி­யுள்ள காஜ­லுக்கு திரை­யு­ல­கத்­தி­னர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

தனது கண­வ­ரது உதவி இல்­லா­மல் இந்­தத் தொழிலை தம்­மால் தொடங்கி இருக்க முடி­யாது என்­கி­றார் காஜல்.

தொழி­ல­தி­பர் கௌதம் கிச்­ச­லுவை கடந்த 2020ஆம் ஆண்டு காத­லித்து மணம் புரிந்­தார் காஜல். இத்­தம்­ப­தி­யர்க்கு ஓர் ஆண் குழந்­தை­யும் உள்­ளது.

"திரு­ம­ணத்­துக்­குப் பிறகு ஒரு பெண் குடும்­பப் பொறுப்­பு­களை மட்­டுமே கவ­னிக்க வேண்­டும் என்று என் கண­வர் வற்­பு­றுத்­த­வில்லை. சொந்­தத் தொழில் தொடங்க உத­வி­க­ர­மாக இருந்­தார்.

"ஒரு கண­வர் எவ்­வாறு இருக்க வேண்­டும் என்­ப­தற்கு சிறந்த முன்­னு­தா­ர­ண­மாக உள்­ளார். அந்த வகையில் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி," எனக் கண­வ­ருக்கு நன்றி சொல்­கி­றார் காஜல் அகர்­வால்.