பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள தமக்கு நல்ல கதாபாத்திரங்கள் தேடி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கௌதமி.
ரசிகர்களும் திரையுலகத்தினரும் தம்மை இன்னும் மறக்கவில்லை என்பதை தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக நினைப்பதாகவும் ஒரு அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"எனது முதல் காதல் எப்போதுமே சினிமா மீதுதான் உள்ளது. அனைத்து மொழி படங்களிலும் என் தாய்மொழி போலவே பாவித்து நடித்தேன்.
"இடையில் பத்து ஆண்டுகள் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியதால் நடிப்பதைக் கைவிட்டு கொஞ்சம் விலகிவிட்டேன். தாய், மனைவி, தோழி என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என்றும் சொல்கிறார்.

