'விக்ரம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.
அந்த வகையில் 'இந்தியன் 2' படத்தை இயன்ற விரைவில் முடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளாராம்.
இதைப் புரிந்துகொண்டுள்ள அப்படத்தின் இயக்குநர் சங்கரும், கமலின் கால்ஷீட்டை துளியளவும் வீணடிக்காமல் அவரிடம் அடுத்தடுத்து வேலை வாங்கி வருகிறார்.
கடந்த சில தினங்களாக 'இந்தியன் 2' படத்தின் பின்னணிக் குரல் பதிவு பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. மேலும், கமல் நடிப்பில் எடுக்கப்பட வேண்டிய சிறு காட்சிகள் சிலவற்றையும் ஒருசேர படமாக்கி வருகிறார் சங்கர்.

