'வாலு பார்ட்டி' பாடல் வெளியீடு

'வாலு பார்ட்டி' பாடல் வெளியீடு

1 mins read
0042b03d-455a-47d8-907a-fdfbe39beb77
-

ஜெய் நடிப்பில் உருவாகி உள்ள 'தீரா காதல்' படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளி யாக இருக்கும் நிலையில், இப் படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது, இந்தப் படத்தின் 'வாலு பார்ட்டி' என்ற பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், ஜெய்யுடன் ஒரு குழந்தை செய்யும் சேட்டை சிறப் பாக அமைந்துள்ளது. ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும் முன்னாள் காதலராக இருந்த நிலையில், ஜெய் மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அதன்பின் மீண்டும் ஐஸ்வர்யாவை சந்திப்பதும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும்தான் படத்தின் கதை. படம் காதலர்கள் வரவேற் பைப் பெறும் என நம்பப்படுகிறது.