நடனக் கலைஞரும் மருத்துவரும் நடிகையுமான சாய் பல்லவி, தனக்கு 31 வயது ஆனபோதிலும் இளம்பருவத்தில் ஏற்பட்ட காதல் அனுபவங்கள் இன்னும் மறக்கமுடியாதபடி தன் மனதில் நிழலாடி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
'மாரி 2' படத்தில் நடிகர் தனுஷின் ஜோடியாக நடித்தவர் சாய் பல்லவி (படம்). இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் பட உலகில் முன்னணி நாயகியாக உயர்ந்துள்ள சாய் பல்லவி, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாகத் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்திலும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சாய் பல்லவி.
"நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படிக்கும் மாணவன் ஒரு வனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன்மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த விஷயத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு காதல் கடிதம் எழுதினேன். ஆனால் அதை அவனிடம் எப்படிக் கொடுப்பது எனத் தெரியாமல் புத்தகத்தில் வைத்திருந்தேன்.
"எதிர்பாராமல் என் அம்மா கண்ணில் அந்தக் கடிதம் படவே, அளவுக்கு அதிகமாக அவருக்கு கோபம் வந்துவிட்டது. என்னை செம்மையாக அடித்துவிட்டார்.
"அம்மா அடித்தது அதுதான் முதல் முறையும் கடைசி முறையும். இப்போதுவரை மீண்டும் என் அம்மாவிற்கு இதுபோல் கோபத்தை வரவழைக்கும் எந்த வேலையையும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
"நம்மை எவ்வளவோ செல்லமாக கண்ணின் மணி போல் பார்த்துக்கொண்டு, நிலவைக் காட்டி சோறு ஊட்டி வளர்க்கும் எந்தத் தாயாக இருந்தாலும் அவரது கையில் அடிவாங்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள்.
"குழந்தைகளை நல்ல வழியில் வளர்க்கும் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு ஒரு ஹீரோதான்,'' என்று கூறியுள்ளார் சாய் பல்லவி.
இவரைப்போல் கீர்த்தி சுரேஷ் தன் காதல் அனுபவங்களை மனம்விட்டு பகிர்ந்து கொள்ளா விடிலும், காதலரின் புகைப்படத்தை அவர் பதி விட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் 'மாமன்னன்', 'சைரன்', 'ரிவால்வர் ரீட்டா', 'ரகு தாதா' உட்பட அரை டஜன் படங்கள் உள்ளன.
இப்படி பரபரப்பாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக அண்மையில் தகவல் பரவியது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் அதிபரும் தொழிலதிபருமான தன் நீண்ட நாள் நண்பர் ஃபர்ஹான் பின் லியாகத் என்பவருடன் அவர் அணிந்திருக்கும் ஆடை யைப் போலவே மஞ்சள் நிறத்தில் அணிந்து கொண்டு நெருக்கமாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்.
இதைப்பார்த்த வலைத்தளவாசிகள் இவர்தான் உங்கள் காதலரா? என கேட்க, "காதலர் பற்றி உங்களிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்? சற்றுப் பொறுங்கள், எல்லாவற்றையும் 'உள்ளங்கை நெல்லிக்கணி' என மறைக் காமல் சொல்லிவிடுகிறேன்," என்று பதி விட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
படங்கள்/செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்

