ஒரு படத்தில் நடிப்பதற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கி வரும் சமந்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.100 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சொந்த வீடு வைத்திருக்கும் சமந்தா, சொத்துகளை வாங்கி விற்பதிலும் முதலீடு செய்துள்ளார். 'சூப்பர் புட்' என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சமந்தாவுக்கு ஆண்டுதோறும் கணிசமான வருமானம் வருகிறது. 'ஷாக்கி' என்ற பேஷன் பிராண்டையும் சொந்தமாகக் கொண்டு அதன்மூலமும் கல்லா கட்டி வருகிறார். இதுதவிர பல குளிர்பான நிறுவனங்களின் தூதராகவும் இருந்து வருகிறார். அந்தவகையில், ஒரு நடிகையாக சம்பாதிப்பதைவிடவும் இதுபோல் சம்பாதிப்பதில் சமந்தாவுக்கு எக்கச்சக்க வருமானம் வந்து கொட்டுகிறதாம்.
பலவிதங்களில் கல்லா கட்டும் சமந்தா
1 mins read

