தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினிக்கு வில்லனாக நடிக்க விக்ரமுக்கு சம்பளம் ரூ.50 கோடி

2 mins read
c5121063-7611-4f87-a89f-b68b06a9b432
-

நடி­கர் ரஜி­னி­காந்த்தை வைத்து ஜெய் பீம் பட இயக்­கு­நர் ஞான­வேல் புதிய படம் ஒன்றை இயக்க இருக்­கி­றார். ரஜி­னி­காந்­தின் 170வது பட­மா­கத் தயா­ரா­க­வி­ருக்­கும் அந்­தப் படத்தை லைக்கா நிறு­வ­னம் மாபெ­ரும் செல­வில் பட­மாக்க முடி­வு­செய்­துள்­ளது. அது தொடர்­பாக முதல்­கட்­டப் பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அந்­தப் படத்­தில் ரஜினிகாந்­துக்கு வில்­ல­னாக, புகழ்­பெற்ற முன்­னணி நாய­கர்­களில் ஒரு­வரை இயக்­கு­நர் தேடி வரு­கி­றார். அந்த வரி­சை­யில் அவர் சியான் விக்­ர­மைத் தேர்­வு­செய்­துள்­ளார். அது­கு­றித்து விக்­ர­மி­டம் அவர் பேச்­சு­வார்த்­தை­யில் இறங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. கதா­நா­ய­க­னுக்கு நிக­ரான வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க விக்­ர­முக்கு ஒரே தட­வை­யாக ரூ.50 கோடி சம்­ப­ளம் கொடுப்­ப­தற்கு லைக்கா நிறு­வ­னம் முன்­வந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், ரஜி­னி­காந்­துக்கு வில்­ல­னாக நடிக்க விக்­ரம் தயங்­கு­வ­தாகச் சில ஊட­கங்­களும், படத்­தின் தனக்­காக கதா­பாத்­தி­ரம் பிடித்­து­விட்­ட­தால், விக்­ரம் நடிக்க ஒத்­துக்­கொண்டு ஐம்­பது கோடி ரூபாய் பணத்­தைப் பெற்­றுக்­கொண்­டார் என்று வேறு சில ஊட­கங்­களும் தெரி­வித்­துள்­ளன. ஆனால், இது­கு­றித்து நடி­கர் விக்­ரம் எது­வும் கருத்­துச் சொல்­ல­வில்லை.

ரஜி­னிக்கு வில்­ல­னாக விக்­ரம் நடிக்­க­வுள்­ளது ரசி­கர்­க­ளி­டையே எதிர்­பார்ப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. பொது­வாக அது எப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் கடி­ன­மான உழைப்பை நடி­கர் விக்­ரம் வெளிப்­படுத்­து­வார்.

ரஜி­னி­காந்த் இப்­போது இயக்­கு­நர் நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் 'ஜெயி­லர்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். இந்­த­நி­லை­யில் அந்­தப் படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யி­டப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சன் பிக்­சர்ஸ் தயா­ரிப்­பில் உரு­வா­கும் இந்தப் படத்­திற்கு அனி­ருத் இசை­ய­மைத்து வரு­கி­றார்.

அதைத்­தொ­டர்ந்து தன்­னு­டைய மகள் ஐஸ்­வர்யா இயக்­கி­வ­ரும் 'லால் சலாம்' படத்­தில் மொய்­தீன் பாய் என்­கிற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து வரு­கி­றார். மும்­பை­யில் இந்தப் படத்­திற்­கான படப்­பி­டிப்பு நடை­பெற்று வரு­கிறது.‌‌ அண்­மை­யில் இந்­தப் படம் தொடர்­பான பதாகை ஒன்­றும் வெளி­யாகி விவா­தங்­க­ளுக்கு ஆளா­னது.

இந்­தப் படத்­தைத் தொடர்ந்து இயக்­கு­நர் ஞான­வேல் இயக்க உள்ள படத்­தில் ரஜி­னி­காந்த் நடிக்க உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது. இந்தப் படத்­தின் படப்­பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்­க­வுள்­ளது. தற்­போது இப்­ப­டத்­தின் நடி­கர், நடி­கை­கள் மற்­றும் தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் தேர்வு நடை­பெற்று வரு­கிறது.

இயக்­கு­நர் ஞான­வேல் இயக்­கும் படத்­தில் வில்­ல­னாக நடிக்க விக்­ர­முக்கு ரூ.50 கோடியா என கோடம்­பாக்­கத்­தில் ஒரே பேச்­சாக உள்­ள­தாம். இருப்­பி­னும், அதி­கா­ர­பூர்வ தக­வல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.