கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜப்பான்'. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் நடித்து வருகிறார். இயக்குனர் விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் உருவாகவுள்ளன.
மாபெரும் செலவில் உருவாகும் இப்படத்தை 'டிரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. தேசிய விருதுபெற்ற ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அணு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. படப்பிடிப்புகள் தூத்துக்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் கொடைக்கானலிலும் நடந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது. இதற்காக அதிகச் செலவில் 200 குடில்கள் கொண்ட பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது 46வது பிறந்தநாளை வரும் மே 25-ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
இதையொட்டி 'ஜப்பான்' படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

