சிங்கப்பூர் குறும்படத்திற்கு நியூயார்க் 'ஒனிரோஸ்' திரைப்பட விழாவில் இரு விருதுகள்

3 mins read
cd869fdb-d38e-4368-9302-002c5605fc29
-

மோன­லிசா

'மனி­தன்' என்ற சிங்­கப்­பூர் தமிழ் குறும்­ப­டம் அண்­மை­யில் நடை­பெற்ற அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரின் ஒனி­ரோஸ் திரைப்­பட விழா­வில் (ONIROS Film Awards New York) இரு பிரி­வு­களில் விரு­து­களை வென்­றுள்­ளது.

இக்­கு­றும்­ப­டத்­தில் பணி­யாற்­றிய மூன்று சிங்­கப்­பூர் இளை­யர்­கள் 'சிறந்த நடி­கர்', 'சிறந்த திரைக்­கதை' என்ற இரு பிரி­வு­களில் விரு­து­க­ளைப் பெற்­றுள்­ள­னர்.

இவ்­வி­ழா­வில் சிறந்த நடி­க­ருக்­கான விருதை இக்­கு­றும்­ப­டத்­தின் கதையை எழுதி முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடித்த திரு சர­வ­ணன் கெள­தம், 26 பெற்­றுள்­ளார். இக்­கு­றும்­ப­டத்­தின் திரைக்­கதையை நண்­பர்­க­ளான மூவர் இணைந்து எழு­தி­யுள்­ள­னர். இவ்­வி­ழா­வில் சிறந்த திரைக்­க­தைக்­கான விரு­தினை திரு சர­வ­ணன் உள்­பட தற்­ச­ம­யம் தேசிய சேவை புரிந்­து­வ­ரும் திரு தமிழ், 23, இக்­கு­றும்­ப­டத்­தின் இயக்­கு­ந­ரான திரு முக­மது ஜர்­ஜிஸ் ஜஃப­ருல்லா ஆகி­யோ­ரும் இணைந்து பெற்­றுள்­ள­னர்.

அன்­பை­யும் மனித மாண்­பை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதே நல்­வாழ்­வின் அடித்­த­ளம் என்ற கருப்­பொ­ரு­ளை­யொட்டி இக்­கு­றும்­ப­டம் அண்­மை­யில் உரு­வாக்­கப்­பட்­டது.

மூன்று மதங்களைச் சார்ந்த மூவர் வாழ்­வில் ஓர் இர­வில் நடக்­கும் சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி நக­ரும் 15 நிமிட நீள இக்­கு­றும்­ப­டத்தை 'தி சூசன் ஒன் ப்ரொ­டக்­‌ஷன்' நிறு­வ­னம் தயா­ரித்­துள்­ளது. இரு பிரி­வு­க­ளி­லும் விரு­து­களைப் பெற்­றுள்ள திரு சர­வ­ணன் கடந்த ஒன்­பது ஆண்­டு­களாக திரைத்­து­றை­யில் பல்­வேறு பணி­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளார். இவர் இது­வ­ரை­யில் 25 குறும்­ப­டங்­க­ளை­யும் இயக்­கி­யுள்­ளார்.

'தேடல்' என்ற வசந்­தம் தொலைக்­காட்சி நிகழ்­வின் மூலம் தன் நடிப்புப் பரி­மா­ணத்தைத் தொடங்­கிய இவர் வேட்டை 5, மரி­யாதை, மையம், நாம் 1 & 2 போன்ற வசந்­தம் தொலைக்­காட்சி நாட­கங்­க­ளி­லும் நடித்­துள்­ளார். நடிப்பு, திரைக்­கதை, இயக்­கம், பாடல் வரி­கள் எழு­து­வது போன்ற பன்­மு­கத்­தி­றமை கொண்ட இவ­ருக்கு இந்­தி­யா­வின் தமிழ்த்­தி­ரை­யு­ல­கில் சிறந்த நடி­க­ரா­வதே இலட்­சி­யம்.

"எங்­க­ளு­டைய நீண்ட நாள் கன­விற்கும் கடும் உழைப்­பிற்­கும் கிடைத்த அங்­கீ­கா­ர­மாக இவ்­விரு­து­களைக் கரு­து­கி­றேன். தொடர்ந்து இத்­து­றை­யில் மென்­மே­லும் சாதிக்­கும் உற்­சாக கரு­வியே இவ்­வி­ரு­து­கள்" என்று கூறி­னார் திரு சர­வ­ணன்.

இக்­கு­றும்­ப­டத்­தின் இயக்­கு­ந­ரும் வச­ன­கர்த்­தா­வு­மான திரு ஜர்­ஜிஸ், "ஒரு நடி­க­ருக்­குள் படத்­தின் கதாபாத்­தி­ரத்தை கொண்டு வரு­தல், எளி­மை­யான உடல், வாய் மொழி­களில் கதையைப் பார்­வை­யா­ளர்­க­ளுக்கு விளக்­கு­தல் என்­பன போன்ற அடிப்­ப­டைக் கூறு­களை மெரு­கேற்­றிக்­கொள்­ளும் வாய்ப்­பாக இக்­கு­றும்­ப­டம் அமைந்­தது. அதி­லும் நண்­பர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றி­யது மறக்­க­மு­டி­யாத அனு­ப­வம்," என்று கூறி­னார்.

இது­வ­ரை­யில் ஐந்து குறும்­படங்­களை இயக்­கி­யுள்ள திரு ஜர்­ஜிஸ் குறைந்த செல­வில் உரு­வான தனிக்­கு­றும்­ப­டம் (Independent short film) ஆத­லால் இக்­கு­றும்­ப­டத்­தின் படப்­பிடிப்பை இரண்டே இர­வு­களில் முடித்­த­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார்.

மேலும் அதிக வச­தி­கள் இல்­லாத சூழ­லில் இரவு நேரத்­தில் போதிய வெளிச்­சத்­து­டன் பட­மாக்­கு­வது ஒட்­டு­மொத்த குழு­விற்கே மிகப்­பெ­ரிய சவா­லாக அமைந்­த­தா­க­வும் இவர் தெரி­வித்­தார். மேலும் இக்­கு­றும்­ப­டம் இவ்­வாண்­டின் மோக்கோ அனைத்­து­லகத் திரைப்­பட விழா, கோலி­வுட் அனைத்­து­லகத் திரைப்­பட விழா உள்­பட பல திரைப்­பட விழாக்­களில் பல்­வேறு பிரி­வு­களில் விரு­து­களை வென்­றுள்­ளது. இக்­கு­றும்­ப­டத்தை வரு­கின்ற ஜூலை மாதம் யூடி­யூப் தளத்­தில் வெளி­யி­ட­வுள்­ள­தா­க­வும் படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­த­னர்.