ராஷ்மிகா மந்தனாவைவிட தம்மால் சிறப்பாக நடிக்க முடியும் என்று தாம் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ராஷ்மிகா மீது தாம் மிகுந்த அபிமானம் கொண்டுள்ளதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெளியான 'ஃபர்ஹானா' படத்தில் நாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
பட வெளியீட்டுக்கு ஏற்பட்ட தடைகளை மீறி இப்படம் திரைகண்டுள்ள நிலையில், ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது. இந்நிலையில் புதிய சர்ச்சையில் அவர் சிக்கியுள்ளார்.
பேட்டி ஒன்றில் 'புஷ்பா' தெலுங்கு படம் குறித்து ஐஸ்வர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அற்குப் பதிலளித்த அவர், 'புஷ்பா' படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்து இருந்தால், ராஷ்மிகா அதில் ஏற்று நடித்திருந்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் தம்மால் மேலும் சிறப்பாக நடித்திருக்க முடியும் என்று பதில் அளித்ததாகவும் ஒரு தகவல் பரவி உள்ளது.
இதை அறிந்த ராஷ்மிகாவின் ரசிகர்கள், ஐஸ்வர்யாவை சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ராஷ்மிகாவை விமர்சிக்கும் விதமாக தாம் எதுவும் கூறவில்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.
"குறிப்பிட்ட ஒரு பேட்டியில் நான் தெரிவித்த கருத்துகள் துரதிர்ஷ்டவசமாக, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. 'புஷ்பா' படத்துக்காக ராஷ்மிகா கடுமையாக உழைத்துள்ளார். அதை நான் ஒருபோதும் குறைகூறவில்லை. ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு. அவர் கடும் உழைப்பாளி," என விளக்கம் அளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் 'புஷ்பா' படத்துக்காக உழைத்தது வீண் போகவில்லை என்றும் வெற்றிப் படத்தில் நடித்த ஒருவரை விமர்சிப்பது நியாயமற்ற, தேவையற்ற செயல் என்றும் ஐஸ்வர்யா மேலும் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து, ராஷ்மிகா வின் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை வசைபாடுவதை சற்றே குறைத்துள்ளனர்.
, :
தமிழகத்

