திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
b485e046-31dd-4433-8fbf-80d3f5ffd492
-
multi-img1 of 3

 சில அரசியல் தலைவர் களை விமர்சனம் செய்ததாலும் நாட்டிற்கு எதிரான சக்திகளை எதிர்த்து குரல் கொடுத்ததாலும் முப்பது விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தாம் இழந்துவிட்டதாக நடிகை கங்கனா ரணவத் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக அந்த விளம்பரங்களில் இருந்து தாம் நீக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரை எனக்கு வருமானம் கிடைக்கும். இப்போது அதை இழந்து விட்டேன். எனினும் முன்பைவிட இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். அரசியல், சமூகம், திரையுலகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எனது கருத்துகளையும் கண்டனத்தை யும் உடனடியாகப் பதிவு செய்கிறேன். இது சிலருக்குப் பிடிக்கவில்லை," என்கிறார் கங்கனா ரணவத்.

 தாம் சிறுமியாக இருந்த போது தனது தாயார் நிறைய ஹார்மோன் ஊசிகள் செலுத்தி தம்மை விரைவில் பெரிய பெண்ணாக்கிவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்கிறார் ஹன்சிகா மோத்வானி. சிறு வயது

முதலே ஊசி போட்டுக் கொள்வது என்றால் தமக்கு மிகவும் பயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"ஊசி என்றால் எனக்குப் பயம். அதனால்தான் பச்சை குத்திக்கொள்வது இல்லை. உண்மை நிலவரம் இப்படி இருக்க, என் தாயார் எப்படி ஹார்மோன் ஊசி போடுவார். அதற்கு நானும் எப்படி சம்மதிப்பேன்.

இந்த வதந்திகள் மூலம் எனது வளர்ச்சியை பார்த்து சில தரப்பினர் பொறாமைப்படுகிறார்கள் என்பது புரிகிறது," என்கிறார் ஹன்சிகா.

திரைப்பட நடிகை என்பதால் சிலர் வேண்டுமென்றே இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவற்றை எல்லாம் தாம் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்.

 தனது அழகுக்கும் தோற்றப் பொலிவுக்கும் தன் தாயார் ஸ்ரீதேவி சொல்லிக்கொடுத்த அழகுக் குறிப்புதான் காரணம் என்கிறார் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அந்த ரகசியத்தை அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"முதலில் நம் முகத்தை நன்றாக தண்ணீரால் கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். அதன்பிறகு ஆவி பிடிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தயிர், இரண்டு ஸ்பூன் தேனை ஊற்றி, பிசைந்துவைத்த வாழைப் பழத்தில் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் பூசி ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இது சருமத்திற்கு ஈரத்தன்மையுடன் பொலிவையும் கொடுக்கும்.

பாதி ஆரஞ்சுப் பழத்தில் விதைகளை நீக்கி முகத்தின் மீது சிறிது நேரம் தேய்க்க வேண்டும். அதன்பிறகு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். முகத்தில் பொலிவு வந்துவிடும். நீங்களும் முயற்சி செய்யுங்கள்," என்கிறார் ஜான்வி.