கபில்தேவுடன் இணைவதில் மகிழ்ச்சி

1 mins read
1959daba-2614-4d56-8e79-e5f2ac80f848
-

ஐஸ்­வர்யா ரஜினி இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'லால் சலாம்' படத்­தில் ரஜினி கௌரவ வேடத்­தில் நடிப்­பது தெரி­யும். தற்­போது முன்­னாள் இந்திய கிரிக்­கெட் வீரர் கபில்­தே­வும் இப்­படத்­தில் இணைந்­துள்­ளார். அவருடன் இணைந்து பணி­யாற்­று­வது மகிழ்ச்சி அளிப்­ப­தாகக் கூறு­கி­றார் ரஜினி.

"முதன்­மு­றை­யாக கிரிக்கெட் உல­கக் கிண்ணத்தை வென்று இந்தியாவைப் பெரு­மைப்­படுத்­திய மிக­வும் மரி­யாதைக்­கு­ரிய, அற்­பு­த­மான மனி­தர் கபில்­தேவ்­ஜி­யு­டன் இணைந்து பணி­யாற்­று­வது எனக்கு மகிழ்ச்­சி­யாக உள்ளது," என்று தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார் ரஜினி.

'லால் சலாம்' படத்தில் மொய்­தீன் பாய் என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார் ரஜினி. ரஜி­னி­யின் சமூக ஊடகப் பதி­வைக் கண்ட ரசி­கர்­கள், கபில் தேவை­யும் ரஜினி யையும் திரை­யில் காண ஆவ­லு­டன் காத்­தி­ருப்பதாகக் குறிப்­பிட்­டுள்­ள­னர்.