வெங்கட் பிரபு இயக்கத்தில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்

1 mins read
aad31748-9a8a-4f92-85e6-5108b7f3ec01
-

விஜய் நடிக்­கும் புதிய படத்தை வெங்­கட் பிரபு இயக்­கு­வார் எனத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. அது­மட்­டு­மல்ல, இந்­தப் படத்­துக்­காக விஜய்க்கு இரு­நூறு கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­வது தமிழ்த் திரை­யு­ல­கத்­தி­னரை வியப்­பில் ஆழ்த்தி உள்­ளது.

விஜய்­யின் அடுத்த படத்தை ஏஜி­எஸ் நிறு­வ­னம் தயா­ரிக்க உள்­ள­தா­க­வும் அந்­நி­று­வ­னத்­துக்கு விஜய் கால்­ஷீட் கொடுத்­துள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­தக் கால்­ஷீட்­டைப் பயன்­ப­டுத்தி விஜய்யை இயக்க உள்­ளார் வெங்­கட் பிரபு.

இதற்­காக அனைத்து மொழி ரசிகர்­களை­யும் கவ­ரும் ­வி­த­மாக கதை­யை­யும் திரைக்­க­தை­யை­யும் வெங்­கட் பிரபு உரு­வாக்கி உள்­ள­தா­கத் தக­வல்.

கதை­யைக் கேட்ட விஜய்­யும் அருமை­யாக உள்­ளது என பச்­சைக்­கொடி காட்டி­விட்­ட­தா­கத் தெரி­கிறது.

குறைந்தபட்­சம் பத்து மொழி­களில் இந்­தப் படம் வெளி­யீடு காணும் என்­றும் இதன் கார­ண­மாக விஜய்க்கு பெரும் ஊதி­யம் பேசப்­பட்­டுள்­ள­தா­க­வும் கோடம்­பாக்க வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

"விஜய்க்கு முதன்­மு­றை­யாக இரு­நூறு கோடி ரூபாய் சம்­ப­ளம் பேசப்பட்டுள்­ளது. கார­ணம், இந்­தப் படத்­தில் அவர் ஏற்க உள்ள கதா­பாத்­தி­ரத்­துக்­காக அவர் பெரி­தும் மெனக்­கெட வேண்­டி­யி­ருக்கும்.

"வழக்­கத்­தை­விட அதிக நாள்­கள் கால்­ஷீட்­டும் ஒதுக்கவேண்­டும் என இயக்கு­நர் தரப்பு கேட்­டுக்­கொண்­டுள்ளது.

"அத­னால்­தான் அவ­ருக்கு மிகப்­பெரிய தொகை வழங்­கப்­ப­டு­கிறது. இது சாத்­தி­ய­மா­கும் பட்­சத்­தில் இந்­தி­யா­வில் 200 கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறும் முதல் கதா­நா­ய­கன் என்ற பெருமை விஜய்க்கு கிடைக்­கும்," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.