'ஒருசிலர் பயமுறுத்தினர்'

'ஒருசிலர் பயமுறுத்தினர்'

2 mins read
a9f81fda-dae2-41ee-b4e2-ac15a59c6039
-

ஒரு திரைப்­ப­டத்தை தர­மாக உரு­வாக்­கு­வது மட்­டுமே மன­நி­றைவு தந்­து­வி­டாது என்­றும் அப்­ப­டம் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாகி மக்­கள் ஆத­ர­வு­டன் வர்த்­தக ரீதி­யா­க­வும் சாதிப்­ப­தில்­தான் உண்­மை­யான வெற்றி அடங்கி உள்­ளது என்­றும் நடி­கர் மணி­கண்­டன் கூறி­யுள்­ளார்.

அறி­முக இயக்­கு­நர் விநா­யக் சந்­தி­ர­சே­க­ரன் இயக்­கத்­தில் நடி­கர்­கள் மணி­கண்­டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்­தி­வேல், நடி­கை­கள் மீரா ரகு­நாத், ரேச்­சல் ரெபாக்கா, கௌசல்யா நட­ரா­ஜன் ஆகி­யோ­ரின் நடிப்­பில் உரு­வாகி உள்­ளது 'குட் நைட்' திரைப்­ப­டம்.

கடந்த வாரம் வெளி­யீடு கண்ட இப்­ப­டம் விமர்­சன, வணிக ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. இதை­ய­டுத்து, அப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­னர். அப்­போது பேசிய மணி­கண்­டன், இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் தம்மை நேரில் சந்­தித்து சொன்ன கதை மிக­வும் பிடித்­தி­ருந்­தது என­வும் இயக்­கு­நர் கதை சொன்ன வித­மும் தம்மை வெகு­வா­கக் கவர்ந்­தது என்­றும் குறிப்­பிட்­டார்.

"இப்­ப­டத்­தின் தயா­ரிப்புத்தரப்பி­டம் சிலர், 'மணி­கண்­டனை வைத்து பட­ம் எ­டுக்­கி­றீர்­களே, இது தேவையா?' என அச்­சு­றுத்­தி­ இருக்­கி­றார்­கள். அதற்கு, தயாரிப்புத் தரப்பில் இந்த கதை மீதும் மணி­கண்­டன் மீதும் இந்­தப் படக்­கு­ழு­வி­னர் மீதும் நம்­பிக்கை இருக்­கிறது என பதி­ல­ளிக்கப்பட்டது.

"எனக்­கும் இப்­ப­டத்­தில் நடித்­துள்ள நடி­கர் ரமேஷ் திலக்­கிற்­கும் இருக்­கும் நட்பு வித்­தி­யா­ச­மா­னது. எனக்கு விஜய் சேது­பதி எப்­படி அண்­ண­னாக, வழி­காட்­டி­யாக இருக்­கி­றாரோ, அதே­போல்­தான் ரமேஷ் திலக்­கும் என் வளர்ச்­சி­யில் அக்­கறை காட்டி வரு­கி­றார். அவ­ரால்­தான் இந்த படக்குழு­வி­னர் எனக்கு அறி­மு­க­மானார்­கள்.

"இந்­தப் படத்­திற்கு ஷான் ரோல்­டன் இசை­ய­மைக்க ஒப்­புக்­கொண்ட பிற­கு­தான், இது ஒரு திரைப்­ப­டம் என்றே பல­ரும் ஏற்­றுக்கொண்­ட­னர். அவ­ரும் இப்­ப­டத்­திற்­காக கடு­மை­யாக உழைத்து இன்­றைய வெற்­றியை சாத்­தி­யப்­ப­டுத்தி இருக்­கி­றார்,'' என்­றார் மணி­கண்­டன்.

அறி­முக இயக்­கு­ந­ராக முதல் படத்­துக்­கு­ரிய அழுத்­தத்தை இயக்­கு­நர் விநா­யக் எதிர்­கொண்ட விதம் அலா­தி­யா­னது என்­றும் அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்து வழி­ந­டத்­தி­ய­தற்­காக அவ­ரைப் பாராட்ட வேண்­டும் என்­றும் மணி­கண்­டன் குறிப்­பிட்­டார். "யார் எத்­த­கைய கருத்­தைச் சொன்­னா­லும் அதைப் பொறு­மை­யாக கேட்­டுக்கொள்­வார். படத்­தின் வெற்­றிக்­கா­கத்­தான் அனை­வ­ரும் பாடு­ப­டு­கி­றார்­கள் என்­பதை அவர் உணர்ந்­தி­ருந்­தார்.

"சில சம­யங்­களில் எனக்கே என் மீது நம்­பிக்கை இருக்­காது. ஆனால், 'குட் நைட்' படத் தயா­ரிப்­பா­ளர்­கள் என் மீது நம்­பிக்கை வைத்­த­னர்.

"இந்­தப் படத்­தில் என்­னு­டன் பணி­யாற்­றிய அனை­வ­ருமே நட்­பு­ட­னும் உரி­மை­யு­ட­னும் பேசிப் பழ­கி­னர். கடு­மை­யாக உழைத்து வெற்­றியை சாத்­தி­ய­மாக்கி உள்­ள­னர். இது மறக்க இய­லாத அனு­ப­வம்," என்­றார் மணி­கண்­டன். இதற்­காக என்­னு­டன் பணி­யாற்­றிய அனை­வ­ருக்­கும் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்," என்­றார் மணி­கண்­டன்.

'ஜெய் பீம்' படத்துக்குப் பின்னர் தனக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவருவதாகச் சொல்பவர், சிறந்த நடிப்புக்காகப் பலரால் பாராட்டப்படுகிறார்.