அஞ்சலி செலுத்திய சூர்யா

அஞ்சலி செலுத்திய சூர்யா

1 mins read
7540b069-10d1-4358-b98b-86d0b90f0eb6
-

அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வில் நிகழ்ந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலின்­போது நடி­கர் ­சூர்­யா­வின் தீவிர ரசி­கை­யான ஐஸ்­வர்யா உயி­ரி­ழந்­தார். இதை அறிந்து கண்­கலங்கிய சூர்யா, தனது ரசி­கை­யின் மறைவுக்கு அறிக்கை வெளி­யிட்டு அஞ்­சலி செலுத்தி உள்­ளார் (படம்).

"இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு. இச்சம்­ப­வம் உண்மையில் எனக்கு அதிர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யது. துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வத்­தில் உங்­க­ளின் மக­ளான ஐஸ்­வர்­யாவை இழந்­தது துரதிர்ஷ்­ட­வ­ச­மா­னது. ஒரு சக மனி­த­ராக மட்­டு­மின்றி, ஒரு தந்­தை­யா­க­வும் உங்­கள் துய­ரத்­தில் நான் பங்­கெ­டுத்­துக்கொள்­கி­றேன்," என்று ஐஸ்­வர்­யா­வின் பெற்­றோருக்கு ஆறு­தல் கூறும் வகை­யில் சூர்­யா­வின் அறிக்கை அமைந்­துள்­ளது.