சோகமான முகத்துடன் நடிகை ரைசா வில்சன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முகம் வீங்கிய நிலையில், கண்ணீர் சிந்தும் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் ரைசா.
"யாரும் தனியாக இல்லை என்பதை நாம் அனைவரும் படிப்படியாக கண்டுபிடித்து வருகிறோம்," என தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரைசா.
இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தங்களுக்குப் புரியவில்லை என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
"உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏதும் பிரச்சினையா, ஏதேனும் இக்கட்டில் சிக்கி உள்ளீர்களா, அல்லது புதுப்படத்துக்கான விளம்பர உத்தியா?," என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பிஉள்ளனர்.