தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாக உள்ளதாகத் தெரிகிறது.
சிம்பு நடிக்கும் 48ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. இதையடுத்து கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.
கதை பிடித்திருந்ததாலும் சிம்புவுடன் முதன் முறையாக இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு என்பதாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்.
'சாணி காயிதம்', 'தசரா' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்ததை அடுத்து கீர்த்தியின் சம்பளம் அதிகரித்துள்ளது. சிம்புவுடன் நடித்த பிறகு அது மேலும் உயரக்கூடும்.

