விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கான பூசை, மலேசியாவில் உள்ள கோவிலில் சிறப்பாக நடந்தேறியது. அவருக்கு மலேசிய ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தை இயக்கியவர் பி.ஆறுமுக குமார். அவர் மீண்டும் சேதுபதியை வைத்து இயக்கித் தயாரிக்கும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
இந்நிலையில், இப்படத்துக்கான பூசையுடன் கூடிய தொடக்க விழா மலேசியாவில் உள்ள ஈப்போ நகரில் நடைபெற்றது.
இதில் பட நாயகனுடன் மலேசிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இப்படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

