தாம் முகப் பொலிவை மேம்படுத்த (பிளாஸ்டிக் சர்ஜரி) அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று நடிகை கிருத்தி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வரும் சில தரப்பினர் வேண்டுமென்றே எதிர்மறை கருத்துகளைப் பரப்பி வருவதாக அவர் கூறியுள்ளார். "அவர்களுடைய நோக்கம் என்னவென்று புரியவில்லை. ஒப்பனை காரணமாக முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. வயது அதிகரிக்கும்போது உடல் முழுவதும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதுவும் இயல்புதான்," என்கிறார் கிருத்தி.
நயன்தாரா சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த இடத்தில் மேலும் இரண்டு திரையரங்குகளைக் கட்ட அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு நடிகர்கள் சிவாஜி கணேசன், நாகேஷ், நடிகை ஜெயப்பிரதா உள்ளிட்டோர் திரையரங்கு களை வாங்கி உள்ளனர். எனினும், பின்னர் அவை விற்கப்பட்டன. நடிகர் விஜய் திரையரங்கு ஒன்றை வாங்கி, பின்னர் அதை இடித்து வணிக வளாகம் ஒன்றைக் கட்டியுள்ளார்.
நடிகை சுனைனா
சிலரால் கடத்தப்பட்டதாக வெளியான காணொளி ஒன்று சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். கடைசியில், அது சுனைனா நடிக்கும் புதுப்படத்துக்கான விளம்பரம் என்பது தெரிய வந்துள்ளது.

