நடிகர் விக்ரம் மிகவும் பெருந்தன்மையானவர் என்கிறார் மாளவிகா மோகனன்.
இருவரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் 'தங்கலான்' படத்தில் நடிப்பது அற்புதமான பயணம் என்றும் விக்ரம் இல்லாமல் இந்தப் பயணம் குறித்து தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"விக்ரமைப் பொறுத்தவரை தாம் மட்டுமே சிறந்த நடிகர் என்று பெயரெடுக்க விரும்ப மாட்டார்.
"தன்னுடன் நடிக்கும் அனைவருக்கும் பாராட்டு கிடைக்க வேண்டும் என்று அக்கறை காட்டுவார். உடன் நடிப்பவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவது அவரது சிறந்த குணங்களில் ஒன்று. அவர் படப்பிடிப்பில் இருந்தால் மொத்த அரங்கமும் கலகலப்பாக இருக்கும்.
"மற்றவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர் விக்ரம்.
"அவருக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்புக்குத் திரும்புவார். ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்க வேண்டும்," என்று மாளவிகா கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் இணையம் வழி ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் மாளவிகா. அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
மாளவிகா மோகனன், விக்ரம்.