தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக ஜெர்மனியில் இருந்து தமிழகம் வந்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் நடித்துள்ளார் மதுரா.
கதைப்படி, லண்டனில் இருந்து தமிழகத்தின் கொடைக்கானல் பகுதிக்கு தன் இசைக் குழுவுடன் வரும் ஜெசி என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருப்பதாக மதுராவை விமர்சகர்கள் பாராட்டி உள்ளனர்.
விஜய் சேதுபதி, விவேக், மேகா ஆகாஷ், மதுரா நடிப்பில் வேங்கட கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்புதான் வெளியீடு கண்டது.
"என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை. அதனால்தான் இக்கதையை உணர்வுபூர்வமாக உள்வாங்கிக்கொண்டு நடிக்க முடிந்தது.
"இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக அமைந்தது. அதேசமயம் நல்ல பொழுதுபோக்கு படமாகவும் உருவாகி உள்ளது," என்கிறார் மதுரா.
படப்பிடிப்பின் முதல் நாளன்று விஜய் சேதுபதியைக் கண்டதும் லேசாகப் பதற்றம் ஏற்பட்டதாகச் சொல்பவர், சேதுபதி மிக யதார்த்தமான நடிகர் எனப் பாராட்டுகிறார்.
"என் பதற்றத்தைக் கண்டதும் நிலைமையைப் புரிந்துகொண்டு அவரே என்னை அணுகிப் பேசினார். நடிப்பு தொடர்பான நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். அவர்தான் எனக்கு நடிப்பு ஆசான்," என்கிறார் மதுரா.
நடிகர் விவேக்குடன் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிடுபவர், விவேக்குடன் பேசிப் பழகிய ஒவ்வொரு நிமிடமும் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளதாகச் சொல்கிறார்.
"படப்பிடிப்பு தளத்தில் சிறு இடைவேளை கிடைத்தாலும் அதை நல்ல முறையில் செலவிடுவார். அப்படிப்பட்ட ஒரு தருணத்தில், தன்னுடைய பியானோ கருவியை எப்படி இயக்கவேண்டும் என விவரித்தார்.
"மேலும், 'முதல்வன்' படத்தில் இருந்து 'குறுக்கு சிறுத்தவளே' என்ற பாடலை வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். அதுமட்டுமல்ல, நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அவரது மறைவு மிகுந்த வேதனையைத் தந்தது," என்கிறார் மதுரா.
யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மேகா ஆகாஷ்தான் தனக்கு மிக நெருக்கமான தோழி என்று குறிப்பிட்டுள்ள அவர், உலகின் எந்த மூலையில் தாம் இருந்தாலும் இந்த நட்பு நீடிக்கும் என்கிறார்.
, :
தமிழகத்

