மனித மனம்தான் முக்கியமானது, பணம் அல்ல என்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.
தமது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியாகியுள்ள அண்மைய பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அவரது பதிவு அமைந்துள்ளது.
"ஆயிரமே இருந்தாலும், இன்றிருக்கும் நாளை இருக்காது-பணம்! மதிப்புமிகு மனம் காப்போம்," என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டு புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. தற்போது புதிய படம் இயக்குவதில் பார்த்திபன் தீவிரம் காட்டி வருகிறார். அதற்காகப் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

